Homeசெய்திகள்தமிழ்நாடுபேரவையில் எதிரொலித்த 'மேதகு பிரபாகரன்' பெயர்: சபாநாயகரிடம் வன்னி அரசு சுவாரஸ்ய கேள்வி!

பேரவையில் எதிரொலித்த ‘மேதகு பிரபாகரன்’ பெயர்: சபாநாயகரிடம் வன்னி அரசு சுவாரஸ்ய கேள்வி!

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரின்போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான சிறப்புக் தீர்மானம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு, தமிழ் தேசியம் சார்ந்த கொள்கைகள் மற்றும் பல்வேறு முக்கியக் கருத்துகளை முன்வைத்து விரிவான உரையாற்றினார். அவரது இந்த உரை அவையின் கவனத்தை ஈர்த்தது.

we-r-hiring

நீண்ட நேரம் தொடர்ந்த இந்த உரையின் நடுவே குறுக்கிட்ட அவைத் தலைவர் சபாநாயகர் JCD பிரபாகரன், நேரத்தைக் கருத்தில் கொண்டு தனது உரையைச் சுருக்கமாக நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்குச் சிரித்தபடியே பதிலளித்த வன்னி அரசு, “மேதகு பிரபாகரன் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர் கொண்டவரே, தமிழ் தேசியம் தொடர்பான இத்தகைய கருத்துகளைப் பேசுவதற்கு நீங்களே தடை போடலாமா?” என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். வன்னி அரசு அவர்களின் இந்த எதிர்பாராத கலகலப்பான பேச்சு பேரவை உறுப்பினர்கள் மத்தியில் புன்னகையையும் லேசான சிரிப்பலையையும் ஏற்படுத்தியது.

பயிர்க்கடன் முழு தள்ளுபடி: பேரவையில் திமுக வலியுறுத்தல் – அரசு தரப்பு விளக்கம்

MUST READ