Homeசெய்திகள்தமிழ்நாடு"மாணவர் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்": நீட் விலக்குத் தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ் பேரவையில் பேச்சு!

“மாணவர் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: நீட் விலக்குத் தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ் பேரவையில் பேச்சு!

-

- Advertisement -

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிரான அரசின் தனித் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் காரசாரமான வாக்குவாதம் மற்றும் அமளிக்கிடையே, ஏழை மாணவர்களின் நலன் காக்க திமுக அரசு கொண்டுவந்துள்ள இந்தத் தனித் தீர்மானத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி முழு மனதுடன் ஆதரிப்பதாகச் சட்டமன்றத்தில் அறுதியிட்டுப் பேசப்பட்டது.

 

we-r-hiring

நீட் தேர்வு: ஏழை மாணவர்களின் கனவைக் சிதைக்கும் ‘கல்வி மாபியா’  சட்டமன்றத்தில் நீட் தேர்வின் கோர முகத்தைத் தன் வாதங்களின் மூலம் தோலுரித்துக் காட்டிய காங்கிரஸ் உறுப்பினர், இது சமூக நீதிக்கும் மாநில சுயாட்சிக்கும் எதிரானது எனத் தெரிவித்தார்."மாணவர் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்": நீட் விலக்குத் தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ் பேரவையில் பேச்சு!

தொடரும் சோகங்கள்: அனிதா தொடங்கி ஆனந்தன் வரை தமிழகத்தில் 36 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட கோர நிகழ்வுகள் நெஞ்சைப் பிழிவதாக அவர் குறிப்பிட்டார்.

கட்டணக் கொள்ளை: 2017-ஆம் ஆண்டில் 15,000 ரூபாயாக இருந்த நீட் பயிற்சி மையக் கட்டணம், இன்று 1,88,000 ரூபாயாக விண்ணைத் தொட்டுள்ளது. இதன் மூலம் கல்வி வணிகமயமாக்கப்பட்டு, ஏழை கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கனவை இழந்து தவிக்கின்றனர்.

இயற்கை நீதிக்கு முரண்: பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மாணவனின் ஒட்டுமொத்தத் திறமையையும், ஒரே ஒரு நுழைவுத் தேர்வு மூலமாக அளவிட முயல்வது இயற்கை நீதிக்கு முற்றிலும் முரணானது என்றார்.

கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல்
தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டமைக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகத்தைத் தன்னிச்சையாக டெல்லி கட்டுப்படுத்துவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு நேரடி எதிரானது என அவர் சாடினார். மேலும், “மேடைக்கு மேடை ‘டிஜிட்டல் இந்தியா’ என்று முழக்கமிடும் ஒன்றிய அரசால், எவ்விதத் தவறும் இல்லாத முறையில் ஒரு நுழைவுத் தேர்வைக்கூட நடத்த முடியாதது கடும் கண்டனத்திற்குரியது” என்று அவர் ஆவேசமாக வாதிட்டார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்குக் கடந்த காலங்களில் விலக்கு பெறப்பட்ட வரலாற்று உண்மைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

காமராஜர் கனவும், வரலாற்றுக் குறிப்புகளும்
விவாதத்தின் நடுவே உரையாற்றிய அவர், பெருந்தலைவர் காமராஜரின் பொன்மொழிகளை நினைவு கூர்ந்தார் “கல்வி அறிவு இல்லாத கடைகோடி மனிதன் கூட தமிழகத்தில் இருக்கக்கூடாது; அப்படிப்பட்ட கல்வி அறிவைப் பெறும் கடைசி மனிதன், படிக்காத காமராசனாகத்தான் இருக்க வேண்டும்” என்று அன்றே காமராஜர் கனவு கண்டார். கிராமப்புற மாணவர்களின் இந்தக் கல்வி உரிமைக்காகவே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து போராட்டக் களத்தில் நிற்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நீட் தேர்வை எதிர்த்து உறுதியாகக் கடிதம் எழுதி, தமிழகத்திற்குத் தடை பெற்றுத் தந்த வரலாற்றுச் சம்பவங்களையும் சபையில் பதிவு செய்தார்.

சபையில் அமளியும் தீர்மான வரவேற்பும்
விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று தொடர்ச்சியாகக் குறுக்கிட்டதால் அவையில் சிறிது நேரம் அமளி நிலவியது. பேரவைத் தலைவர் தொடர்ந்து எச்சரித்தும் வாக்குவாதம் தொடர்ந்தது. இறுதியில், “மாணவர்களின் விலைமதிப்பற்ற வாழ்க்கையை விட எந்த நீட் தேர்வும் உயர்ந்ததல்ல; நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை, அது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்” என்ற உறுதியான நிலைப்பாட்டை முன்வைத்து, தமிழக முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இந்தத் தனித் தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்து உரையை நிறைவு செய்தது.

சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்புப் புயல்: அனைத்துக் கட்சிகளும் ஆதரவு… பாஜக திடீர் வெளிநடப்பு!

MUST READ