இந்தியாவின் முன்னணி வர்த்தகச் குழுமமான டாடா சன்ஸ் (Tata Sons) அமைப்பின் தலைவர் என். சந்திரசேகரன் தனது பதவியில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். வர்த்தக உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தத் திடீர் முடிவு, கார்ப்பரேட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பதவிக்காலம் முடிவடைவதற்குள் விலகல்
கடந்த 2017-ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற சந்திரசேகரனின் பதவிக்காலம், வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ளது. இருப்பினும், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே, மீண்டும் தலைவர் பதவிக்கான நீட்டிப்பைப் பெற விரும்பவில்லை எனக் கூறி அவர் பதவி விலகலை அறிவித்துள்ளார்.

பதவி விலகலுக்கு என்ன காரணம்?
டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடா மற்றும் சந்திரசேகரன் ஆகிய இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடுகளே இந்தத் திடீர் பதவி விலகலுக்கு முக்கியக் காரணம் எனக் கார்ப்பரேட் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளில் இரு தரப்பிற்கும் இடையே முரண்பாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
வர்த்தகச் சந்தையில் தாக்கம்
டாடா நிறுவனத்தை சர்வதேச அளவில் வெற்றிகரமாக வழிநடத்திய சந்திரசேகரனின் இந்த விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் டாடா குழுமப் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.
சந்திரசேகரன் தனது 40 ஆண்டுகால டாடா குழுமப் பயணத்தில், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்துள்ள நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினரிடையே உச்சமடைந்துள்ளது.
“அமித் ஷாவின் உபதேசங்களைக் கேட்க எங்களுக்கு விருப்பமில்லை!” – விவாத ஆஃபரை நிராகரித்த ராகுல் காந்தி!
