Homeசெய்திகள்ஆன்மீகம்பொட்டு வைக்கிறதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சயின்ஸ் இருக்கா? - முன்னோர்கள் செய்த மாஸ் மாஸ்டர்...

பொட்டு வைக்கிறதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சயின்ஸ் இருக்கா? – முன்னோர்கள் செய்த மாஸ் மாஸ்டர் பிளான்!

-

- Advertisement -

ஆன்மீக வாழ்வியலின் உண்மையான தத்துவங்கள், சித்தர்களின் ஞான மரபு, உடலியல் மற்றும் ஆன்மீகத்தின் இணைப்பு குறித்த ஆன்மீக குருவின் சிறப்பு சொற்பொழிவு மற்றும் கேள்வி-பதில் நிகழ்வு நடைபெற்றது. இதில் மனித உடல், ஆன்மா, வழிபாட்டு முறைகள் மற்றும் வாழ்வியல் நெறிகள் குறித்து அவர் ஆழமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.பொட்டு வைக்கிறதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சயின்ஸ் இருக்கா? - முன்னோர்கள் செய்த மாஸ் மாஸ்டர் பிளான்!

திலகமிடுவதன் தத்துவமும் பின்னணியும்
“நமது முன்னோர்கள் எந்த ஒரு ஆன்மீகச் சடங்கையும் மூடநம்பிக்கையாகச் செய்யவில்லை. நெற்றியின் மையப்பகுதியான பிட்யூட்டரி சுரப்பி அமைந்துள்ள இடத்தை ‘பதி’ (கடவுள் இருக்கும் இடம்) என்பர். குளித்து மஞ்சள் பூசி, குங்குமம் வைக்கும் போது உடலுக்குக் கிருமி நாசினியாகவும், நேர்மறை உணர்வுகளையும் தருகிறது. கணவன்-மனைவி இணைந்து வாழ்வதே இல்லறம். குங்குமம் என்பது பெண்ணையும், திருநீறு என்பது ஆணையும் குறிக்கும் தத்துவ அடையாளங்கள். இவற்றைத் துறப்பது அல்லது அணிவது ஆன்மீக மற்றும் வாழ்வியல் மாற்றங்களை உணர்த்தவே பயன்பட்டன.”

we-r-hiring

உடலியலும் ஆன்மீகமும்: தவறான கருத்துகளுக்கு விளக்கம்
பெண்களின் கர்ப்பப்பை அகற்றம் மற்றும் விந்து-சுரோணிதம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “விந்து மற்றும் சுரோணிதம் என்பவை மனிதனின் ஜீவ ஆதாரங்கள். விந்துப் பை மற்றும் சுரோணிதப் பை வேறு, குழந்தையைச் சுமக்கும் கர்ப்பப்பை என்பது வேறு. கர்ப்பப்பையை அகற்றுவதால் ஆன்மீக ஆற்றலோ அல்லது உடலின் அடிப்படை ஜீவ சக்தியோ அழிந்துவிடாது. மூச்சுக்காற்றே உடலின் ஜீவ சக்தியாகிய ‘குண்டலினி’ ஆற்றலாக இயங்குகிறது.”

உண்மையான குரு-சீடன் பந்தம்
குரு-சீடன் உறவு குறித்துப் பேசிய அவர், “இன்றைய காலகட்டத்தில் வாயளவில் குரு-சீடன் எனக் கூறிக்கொள்வது உண்மையான பந்தமாகாது. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு எத்தனையோ சீடர்கள் இருந்தபோதிலும், சுவாமி விவேகானந்தர் என்ற ஒரே ஒரு சீடரால்தான் அவரது பெருமை உலகறியச் செய்யப்பட்டது. குருவின் உபதேசங்களை மாற்றாமல் அப்படியே பின்பற்றி, வாழ்வியல் முறையில் உண்மையாக நடப்பவனே சிறந்த சீடன் ஆவான்.”பொட்டு வைக்கிறதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய சயின்ஸ் இருக்கா? - முன்னோர்கள் செய்த மாஸ் மாஸ்டர் பிளான்!

“மனிதனே கடவுள்”: ஆன்மீகத்தின் உச்சக்கட்ட தத்துவம்
கடவுள் வழிபாடு மற்றும் பிறப்பு-இறப்பு குறித்த விளக்கத்தில், “பஞ்சபூதங்களின் சேர்க்கையினாலேயே மனித உடலும் உலக உயிர்களும் தோன்றுகின்றன. கடவுள் யாருக்கும் தனியாக நன்மையோ தீமையோ செய்வதில்லை. மனிதன் செய்யும் நல்வினை, தீவினைகளே அவனது பிறப்பையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன.  உண்மையில், மனிதனின் மூச்சுக்காற்றே இறைவனின் வடிவம். தன்னுள் இருக்கும் ஆன்மாவை அறிந்து, பிறருக்கு உதவி வாழும் ஒவ்வொரு மனிதனும் கடவுளின் பிம்பமே. இதை உணர்வதே யோகம் மற்றும் ஞானத்தின் உச்சமாகும்.”

இயற்கை வழி வாழ்வே பாதுகாப்பானது!
மனித சமுதாயம் இயற்கையை விட்டு விலகிச் செயற்கையான வாழ்க்கைக்கு மாறியதே நோய் நொடிகள் மற்றும் ஆபத்துகளுக்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டிய அவர், விலங்குகள் மற்றும் பறவைகள் இயற்கையோடு இணைந்து வாழ்வதால் இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே உணரும் ஆற்றல் பெற்றுள்ளன என்றும், மனிதர்களும் இயற்கையோடு இயைந்து வாழப் பழக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  நிகழ்வின் நிறைவில், பல்வேறு இடங்களிலிருந்தும் வந்திருந்த பக்தர்கள் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு குருவின் ஆசிகளைப் பெற்றனர்.

ஆடி அமாவாசை: பூம்புகார் காவிரி சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

MUST READ