Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சரவை மாற்றம் உறுதி? சவுக்கு சங்கர் சொன்ன அந்த 'டாப் 3' மேட்டர்கள்!

அமைச்சரவை மாற்றம் உறுதி? சவுக்கு சங்கர் சொன்ன அந்த ‘டாப் 3’ மேட்டர்கள்!

-

- Advertisement -

தவேக அமைச்சரவை செயல்பாடு குறித்து சவுக்கு சங்கர் காரசார விமர்சனம்: விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்ய முதல்வர் விஜய் திட்டம்?அமைச்சரவை மாற்றம் உறுதி? சவுக்கு சங்கர் சொன்ன அந்த 'டாப் 3' மேட்டர்கள்!

தமிழக அரசியல் களம் மற்றும் தவேக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் அமைச்சரவை செயல்பாடுகள் குறித்துப் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு பரபரப்பான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

we-r-hiring

அமைச்சரவை மாற்றம் உறுதி?
தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தவுடன், தவேக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உறுதியான வாய்ப்புகள் உள்ளதாகச் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளைச் சேகரித்துள்ள முதல்வர் விஜய், செயல்படாத அமைச்சர்களை நீக்கவோ அல்லது இலாகாக்களை மாற்றவோ முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள்

  • ரமேஷ் (அறநிலையத்துறை): மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் அமைச்சர் என்றும், பழனி நில விவகாரத்தில் இவரைச் சிக்க வைக்கச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
  • புசி ஆனந்த்: நிர்வாக அனுபவம் குறைவாக இருப்பதால், அதிகாரிகளைச் சரியாகக் கையாள இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
  • சரத்குமார் (மாற்றப்பட வேண்டியவர்): சேப்பாக்கம் மைதான நிகழ்வைச் சுட்டிக்காட்டி, நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் இவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
  • கீர்த்தனா (முதலீடுகள் ஈர்ப்பு): ‘ரீல்ஸ்’ போடுவதன் மூலம் மட்டும் மாநிலத்திற்கு முதலீடுகள் வராது என்றும், தொழில் அதிபர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சரவை மாற்றம் உறுதி? சவுக்கு சங்கர் சொன்ன அந்த 'டாப் 3' மேட்டர்கள்!

  • ஆதவ் அர்ஜுனா (விளையாட்டுத் துறை): விளையாட்டுத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டாலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் சண்டையிடுவதைக் குறைத்துக்கொண்டு PWD உள்ளிட்ட பிற துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • வன்னியரசு (சமூக நீதித்துறை): தேர்தலுக்கு முன் போராளியாக இருந்தவர், தற்போது சராசரி அரசியல்வாதியாக மாறிவிட்டதாகச் சாடியுள்ளார்.
  • செங்கோட்டையன்: இவரே நிதித்துறையைக் கையாண்டிருக்க வேண்டும் என்றும், மூத்த தலைவரான இவருக்கு வருவாய்த்துறை அல்லது நிதித்துறை வழங்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
  • நிர்மல் குமார்: பல முக்கியத் துறைகளை வைத்துள்ள இவர், பத்திரிகையாளர்களைச் சிறப்பாகக் கையாளும் திறமையான அமைச்சர் என்று பாராட்டிய அதேவேளையில், பணிச்சுமையைக் குறைக்கச் சில துறைகள் மாற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சவுக்கு சங்கரின் பின்னணி மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள்
‘சவுக்கு’ இணையதளத் தொடக்கம்:
2008-ல் லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, ஈழப்போர் மற்றும் காவல்துறை ஊழல்களைப் பற்றி எழுதுவதற்காகத் தொடங்கப்பட்ட ‘சவுக்கு’ பிளாக், பின்னாள்களில் பெரும் கவனத்தைப் பெற்றது என்று தனது அரசியல் பயணத்தை விவரித்தார். மேலும், அச்சுறுத்தல்கள் மற்றும் பலமுறை சிறைவாசங்களைக் கடந்திருந்தாலும், உயிருக்கு பயந்து வாழ முடியாது எனக் கூறிய அவர், சிறையிலிருந்து வெளிவந்த பின் தனக்கு மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சை பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

மக்கள்தொகை பெருக்கத்திற்குப் பரிசா? தென்மாநிலங்களின் கழுத்தை அறுக்கும் தொகுதி மறுசீரமைப்புச் சதி!

MUST READ