Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்த அரசியல் தலைவர்கள்!

சென்னையில் சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்த அரசியல் தலைவர்கள்!

-

- Advertisement -

நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா இன்று மிகுந்த தேசப்பற்றோடு கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.சென்னையில் சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்த அரசியல் தலைவர்கள்!

கட்சி அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றம்
திமுக: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

we-r-hiring

சென்னையில் சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்த அரசியல் தலைவர்கள்!

பாஜக: தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பேரணியாக வந்து தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதில் தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சென்னையில் சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்த அரசியல் தலைவர்கள்!

கம்யூனிஸ்ட் கட்சிகள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அலுவலகத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) அலுவலகத்தில் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொடியேற்றினார்.

சென்னையில் சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்த அரசியல் தலைவர்கள்!

சுதந்திரத்தைப் பற்றி பேச பாஜகவிற்கு அருகதை இல்லை: டி.ராஜா தாக்கு
கொடியேற்றத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா, பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையை கடுமையாகச் சாடினார்.

சென்னையில் சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்த அரசியல் தலைவர்கள்!

தொடர்ந்து பேசிய அவர், “விடுதலைப் போராட்டத்திற்காக சுண்டு விரலைக்கூட அசைக்காத ஆர்.எஸ்.எஸ் வழியில் வந்த பாஜகவிற்கு சுதந்திரத்தைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டு, இன்று சுதந்திர தின விழாவில் ‘யுவசக்தி’ என்று பிரதமர் நாடகமாடுகிறார். 1947-ல் அடைந்த சுதந்திரத்தைப் பற்றி பேசத் தெரியாத பாஜகவினர் 2047 பற்றிப் பேசுகிறார்கள். 2047-ல் பாஜக ஆட்சியில் இருக்குமா அல்லது மக்களால் தூக்கி எறியப்படுமா என்பதை காலமே முடிவு செய்யும். வரும் செப்டம்பரில் டெல்லியில் CPI நடத்தும் ‘செங்கொடிப் பேரணி’ மோடி அரசுக்கான எச்சரிக்கையாக அமையும்” என்றார்.சென்னையில் சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்த அரசியல் தலைவர்கள்!

மல்லிகார்ஜுன கார்கே விவகாரம்: ‘தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி’
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை குறித்துப் பேசிய அவர், “இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான கார்கே ஒரு நிகழ்ச்சியில் அமர்ந்து சென்ற பிறகு, அவர் இருந்த இருக்கையைச் சுத்தம் செய்ததாகக் கூறப்படுவது பேரதிர்ச்சி அளிக்கிறது. சுதந்திர இந்தியாவில் கார்கேவிற்கே இந்த கதி என்றால், சாதாரண தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நிலை என்ன? இது கார்கேவுக்கு மட்டுமல்ல, தலித் மக்கள் அனைவருக்குமே இழைக்கப்பட்ட அநீதி. இதற்குப் பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப் போகிறார்?” எனக் கேள்வி எழுப்பியதுடன், CPI சார்பில் கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தார்.

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி சுதந்திர தின வாழ்த்து!

MUST READ