Homeசெய்திகள்தமிழ்நாடு"OPS-க்கு ஒரு வேண்டுகோள்": ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் ரமேஷ் – பேரவையில் கே.என்....

“OPS-க்கு ஒரு வேண்டுகோள்”: ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் ரமேஷ் – பேரவையில் கே.என். நேரு தக்க பதிலடி!

-

- Advertisement -

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவையின் கண்ணியம் மற்றும் மரபுகள் குறித்து ஆளும்கட்சி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட காரசாரமான விவாதம் பேரவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது."OPS-க்கு ஒரு வேண்டுகோள்": ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் ரமேஷ் – பேரவையில் கே.என். நேரு தக்க பதிலடி!

“முதல்வர் வரும்போது எழுந்து நிற்கக்கூடாதா?” – அமைச்சர் ரமேஷ் கேள்விசட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ரமேஷ், “முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நான், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு சிறிய வேண்டுகோளையும் இந்த நேரத்தில் வைத்துக்கொள்கிறேன். எப்படி கண்ணியம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் எங்கள் எல்லாருக்கும் சொன்னாரோ, அதேபோல அவரது கட்சியினுடைய எதிர்க்கட்சித் தலைவருக்கும் சிறிதளவாவது நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

we-r-hiring

தொடர்ந்து பேசிய அவர், “எட்டு கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய முதலமைச்சர் விஜய் அவைக்குள் வரும்போது, அமர்ந்திருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருப்பது அவையின் கண்ணியத்திற்கு அழகல்ல” என்று சாடினார்.

அமைச்சருக்குத் தக்க பதிலடி கொடுத்த கே.என். நேரு
அமைச்சரின் இந்த விமர்சனத்திற்கு உடனடியாகக் குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சி மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேரு, “சட்டமன்ற அவையின் மரபுகள் மற்றும் விதிமுறைகள் குறித்துப் புதியதாக வந்துள்ள அமைச்சர்கள் எங்களுக்கு வகுப்பு எடுக்கத் தேவையில்லை” எனக் கூறித் தக்க பதிலடி கொடுத்தார்.

முன்னாள் முதல்வா் ஸ்டாலின் பேரவை வந்தபோது எதிா்கட்சித் தலைவராக இருந்த இபிஎஸ் எழுந்து நின்றதில்லை எதிா்க்கட்சித் தலைவருக்கு சொல்லிக் கொடுங்கள் என கூறுவதை ஏற்க முடியாது அவை விதிகள் மற்றும் உறுப்பினர்களின் மரியாதை செலுத்தும் முறை குறித்து இருதரப்பிலிருந்தும் அடுக்கடுக்கான வாதங்கள் முன்வைக்கப்பட்டதால், பேரவையில் அனல் பறக்கும் விவாதம் நிலவியது.

“100 நாட்களில் 39 லட்சம் சான்றிதழ்கள்!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்!

MUST READ