Homeசெய்திகள்இந்தியாபுதிய தொழில்துறை வழக்குகளுக்கு 'தொழில்துறை உறவுகள் குறியீடு 2020' சட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

புதிய தொழில்துறை வழக்குகளுக்கு ‘தொழில்துறை உறவுகள் குறியீடு 2020’ சட்டம் பொருந்தும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

-

- Advertisement -

தொழில்துறை தகராறு தொடர்பான புதிய வழக்குகள் 2025 நவம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்த ‘தொழில்துறை உறவுகள் குறியீடு 2020’ (Industrial Relations Code, 2020) சட்டத்தின் அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

we-r-hiring

அதேவேளையில், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் 1947-ஆம் ஆண்டு தொழில்துறை தகராறு சட்டத்தின் (Industrial Disputes Act, 1947) அடிப்படையிலேயே விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

‘தொழில்’ என்பதன் வரையறை: தொழிலாளர் சட்டப் பாதுகாப்புகளை விரிவுபடுத்துவதற்காக, 1947-ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 2(j)-இன் கீழ் ‘தொழில்’ (Industry) என்ற வரையறைக்குள் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், இலாப நோக்கற்ற அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் கிளப்புகள் என அனைத்தும் கொண்டுவரப்பட்டன.

குறிப்பாக, கடந்த 1978-ல் பெங்களூரு நீர் வழங்கல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு மும்முனைச் சோதனையை (Triple Test) வகுத்திருந்தது.

இதன்படி, ஒரு நிறுவனத்தின் முறையான செயல்பாடு, முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பொருட்கள் உற்பத்தி அல்லது சேவைகள் வழங்குதல் ஆகியவை இருந்தால் அது ‘தொழில்’ என்ற தகுதியைப் பெறும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிய வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது.

ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு: இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, பி.எஸ்.நரசிம்மா, தீபங்கர் தத்தா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா, ஜாய்மால்யா பக்‌ஷி, அலோக் ஆராதே மற்றும் விபுல்.எம்.பஞ்சோலி அடங்கிய ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது.

  • பெரும்பான்மைத் தீர்ப்பு: அமர்வில் உள்ள 6 நீதிபதிகள் பெரும்பான்மைத் தீர்ப்பை வழங்கினர். அதன்படி, தொழிலாளர் – முதலாளி ஒத்துழைப்பு உறவு நிலவக்கூடிய அனைத்து நிறுவனங்களும் ‘தொழில்’ என்ற வரையறைக்குள் வரும் என்றும், அரசின் இறையாண்மை சார்ந்த நடவடிக்கைகளைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • நிலுவை வழக்குகள் மற்றும் புதிய விதிமுறைகள்: தற்போது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் பெங்களூரு நீர் வழங்கல் வழக்கின் மும்முனைச் சோதனையின்படியே தொடர்ந்து தீர்க்கப்படும் என்றும், ஏற்கனவே முடித்துவைக்கப்பட்ட வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படாது என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2020-ஆம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் “தொழில்” என்பதன் பொருளை ஒவ்வொரு நிறுவனத்தின் தன்மைக்கேற்ப தனிப்பட்ட முறையில் விளக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியர் என்று சொன்னால் போதுமா? அருணாச்சலப் பிரதேச மாணவியின் வைரல் வீடியோ ஏற்படுத்திய விவாதம்!

MUST READ