தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து, திமுக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் வழக்கறிஞர் சித்திக் அவர்கள் லிபர்ட்டி தமிழுக்கு அளித்த நேர்காணலில் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
சட்டமன்றத்தில் உதயநிதியின் அதிரடி கேள்வி
சமீபத்தில் நடிகர் விஜய், தன்னிடம் மூன்று கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை எடுக்க விடாமல் தடுப்பதாகவும் மிரட்டும் தொணியில் பேசியிருந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய சித்திக், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் சரியான பதிலடி கொடுத்ததாகத் தெரிவித்தார்

”கோப்புகள் உங்களிடம் இருந்தால், அதை ஏன் வெளியிடாமல் காலதாமதம் செய்கிறீர்கள்? ஜோசியக்காரர் சொன்னால்தான் எடுப்பீர்களா?” என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்ட சித்திக், கோப்புகள் மீது உண்மை இருந்தால் அதைத் தயங்காமல் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்
கார் விவகாரமும் நிதி நெருக்கடியும்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் விவகாரம் குறித்துப் பேசிய அவர், தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், கார் வாங்கத் தேவையில்லை என்பதை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொள்கை முடிவாக எடுத்துள்ளதாகத் தெரிவித்தார் பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை வைத்திருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள், காருக்காகக் கோரிக்கை வைப்பதையும், அதன் பின்னணியையும் அவர் விமர்சித்தார்
முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்த விமர்சனம்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் அணுகுமுறையைச் சித்திக் கடுமையாகச் சாடினார் கர்நாடக முதலமைச்சரை முன்னிறுத்தி மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாகக் கூறியிருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், அங்கு கோட்-சூட் அணிந்து சென்றதைக் காட்டிலும், உரிமைகளுக்காகப் பேசுவதே முக்கியம் என்று சுட்டிக்காட்டினார்
மேலும், தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரத்தில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக, முதலமைச்சர்கள் மாநாட்டில் விஜய் பேசியிருப்பதாகக் குற்றம் சாட்டிய சித்திக், இது அமித்ஷாவின் குரலாக ஒலிக்கிறது என்றும் விமர்சித்தார்
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு
எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு இல்லம் ஒதுக்கப்படுவது அவரது அரசியலமைப்புச் சார்ந்த உரிமை என்றும், மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்க அது ஒரு முக்கிய மையமாக உள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார்
தங்கள் தரப்பு வாதங்களை ஆதாரங்களுடன் முன்வைக்கும் திமுக, பொதுமக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி சட்டமன்றத்தில் செயல்படுவதாகவும் வழக்கறிஞர் சித்திக் தனது நேர்காணலில் தெரிவித்தார்
சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: எதிர்க்கட்சித் தலைவர் – அமைச்சர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்!
