Homeசெய்திகள்க்ரைம்ஆக்ராவில் சூட்கேஸில் பெண் உடல் கண்டெடுப்பு: கூடுவாஞ்சேரியில் அரங்கேறிய அதிர்ச்சி கொலையின் பின்னணி அம்பலம்!

ஆக்ராவில் சூட்கேஸில் பெண் உடல் கண்டெடுப்பு: கூடுவாஞ்சேரியில் அரங்கேறிய அதிர்ச்சி கொலையின் பின்னணி அம்பலம்!

-

- Advertisement -

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்தில், சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட ‘தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்’ ரயிலின் சிவப்பு நிற சூட்கேஸில் இருந்து தலை மற்றும் உடல் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இக்கொலைச் சம்பவம் சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ளதும், கொலையுண்டவர் ஹைதுல் நிஷா (45) என்பதும் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் தெரியவந்துள்ளது.ஆக்ராவில் சூட்கேஸில் பெண் உடல் கண்டெடுப்பு: கூடுவாஞ்சேரியில் அரங்கேறிய அதிர்ச்சி கொலையின் பின்னணி அம்பலம்!

துப்புதுலக்கிய 350 சிசிடிவி காட்சிகள்
ஆக்ராவில் மீட்கப்பட்ட சூட்கேஸில் சென்னைத் துணிக்கடையின் பாலித்தீன் பை இருந்ததை அடுத்து, ஆக்ரா ரயில்வே போலீசாரின் உதவியுடன் சென்னை ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி ஆண் மற்றும் பெண் ஒருவர் சிவப்பு நிற சூட்கேஸுடன் ரயில் நிலையத்திற்கு வந்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பெட்டியில் அதை வைத்துவிட்டு ரயில் புறப்படுவதற்கு முன்பே இறங்கிச் சென்றது பதிவாகியுள்ளது. தொடர்ந்து, சென்ட்ரல் முதல் பூங்கா மற்றும் தாம்பரம் வரையிலான சுமார் 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் காவல்துறையினர் அலசினர். இதற்கிடையே, கொலையுண்ட பெண்ணின் அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

we-r-hiring

வீட்டில் வீசிய துர்நாற்றம் – அதிர்ச்சித் தகவல்கள்
இதற்கிடையில், கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாகக் காவற்துறைக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் காவல்துறினரே அதிர்ந்து போகும் வகையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவட்டன. கொலையாளிகள் அப்பெண்ணின் உடல் பாகங்களை வெட்டி, பிரியாணிப் பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைத்திருந்தது தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. அங்கிருந்த அனைத்து தடயங்களையும் சேகரித்த போலீசார், ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.ஆக்ராவில் சூட்கேஸில் பெண் உடல் கண்டெடுப்பு: கூடுவாஞ்சேரியில் அரங்கேறிய அதிர்ச்சி கொலையின் பின்னணி அம்பலம்!

உறவினர் அளித்த தகவல் மற்றும் அடையாளம் உறுதி
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 10-15 நாட்களுக்கு முன்பு தாம்பரத்தில் தனது மகனுடன் வசித்து வந்த ஹைதுல் நிஷா என்பவர் மாயமானதாக அவரது மகன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. மகனிடம் போலீசார் நடத்திய விசாரணையின் மூலம், கொலையுண்டது ஹைதுல் நிஷா என்பது உறுதியானது.

கொலைக்கான காரணம் என்ன?
விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தக்ஷிண் கிருஷ்ணாபூர் பகுதியைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த பகபதி மாஜி ஆகிய ஆணும் பெண்ணும் அந்த வீட்டில் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது. வடமாநிலத்தைச் சேர்ந்த அந்த நபருக்கும், ஹைதுல் நிஷாவிற்கும் இடையே இருந்த தகாத உறவு அல்லது பணப் பிரச்சனை காரணமாக இந்த கொடூரக் கொலை அரங்கேறியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தனிப்படை தீவிரம்
உத்தரப் பிரதேச ரயில்வே போலீசார், சென்னை ரயில்வே போலீசார் மற்றும் தாம்பரம் மாநகரக் காவல்துறையினர் இணைந்து தனிப்படைகள் அமைத்து தலைமறைவாகியுள்ள மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகபதி மாஜி ஆகியோரைச் செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி பதிவுகள் மூலமாகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு பெண்ணைக் கொன்று, உடல் பாகங்களைச் சமைக்க முயன்ற இந்தச் சம்பவம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் ஐஓபி வங்கியில் ரூ.3.09 கோடி தங்கம் மோசடி: உதவி மேலாளர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது!

MUST READ