Homeசெய்திகள்க்ரைம்திருவிடைமருதூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகை, 2.5 கிலோ வெள்ளி கொள்ளை

திருவிடைமருதூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகை, 2.5 கிலோ வெள்ளி கொள்ளை

-

- Advertisement -

திருவிடைமருதூர் அய்யனார் கோவில் தெருவில் வசிக்கும் லட்சுமணன் என்பவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகைகள் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை. காவல்துறையினர் மோப்பநாய் உதவி கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

we-r-hiring

இரண்டு நாட்களுக்கு முன்பு திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 35 சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவத்தில் இன்னும் குற்றவாளி பிடிப்படாத நிலையில் மேலும் ஒரு கொள்ளை சம்பவத்தால் திருவிடைமருதூர் பகுதியில் பரப்பரப்பு.

திருவிடைமருதூர் அய்யனார் கோவில் தெருவில் வசிக்கும் லட்சுமணன் ஓய்வு பெற்ற வேளாண் துறையில் பணிபுரிந்த காவலர். இவர் சென்னையில் வேலை பார்க்கும் தனது மகன் மற்றும் மருமகளை பார்ப்பதற்காக கடந்த பத்தாம் தேதி வீட்டை பூட்டிவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளனர்.

வீட்டிற்குள் நுழைந்ததும் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து லட்சுமணன் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் லியோ என்ற மோப்பநாய் உதவி கொண்டு கொள்ளைகளை தேடி வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 35 சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவத்தில் இன்னும் கொள்ளையர்கள் பிடிப்படாத நிலையில் தற்போது திருவிடைமருதூரில் 40 சவரன் நகைகள் மற்றும் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போன சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

உடலில் டேப் ஒட்டி ரூ.1.5 கோடி கஞ்சா எண்ணெய் கடத்தல்: மைனர்கள் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் ஐதராபாத்தில் கைது!

MUST READ