மகன் உயிரிழந்ததால் தாய்க்கு வந்த ரூ.38 லட்சம், வங்கி கணக்கு துவங்கி ஏ.டி.எம் கார்டை கட்டுப்பாட்டில் வைத்து இருந்து பணத்தை எடுத்துகொண்ட மருமகள் மீது மாமியார் கொடுத்த புகார், சிறைக்கு சென்ற மருமகள்..


சென்னை கிழக்கு தாம்பரம் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் (63-வயதான) ஜெயா. இவரது கணவர் ராமநாதன் (வயது-68). இவர்களது ஒரே மகன் சுரேஷ். மறைமலை நகரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுரேஷ், கடந்த 4,ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜெயந்தி (வயது-36) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 6,மாதங்களே ஆன நிலையில், கொரோனா நோய் தொற்றால் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மகனை இழந்த துக்கத்தில் இருந்த தாய் ஜெயா ஜெயந்தியை தன் மகள் போல பார்த்து வந்ததோடு வீடு கார் அனைத்தையும் ஜெயந்தியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மகன் பணிபுரிந்த நிறுவனம், சுரேஷின் தாயார் ஜெயாவுக்கு ரூ.38 லட்சம் கொடுக்க முடிவு செய்தது. வங்கி கணக்கு விவரம் கேட்டபோது, ஜெயாவுக்கு வங்கி கணக்கு ஒன்று ஜெயா பெயரில் மேற்கு மாம்பலத்தில் புதிய வங்கி கணக்கை மருமகள் ஜெயந்தி தொடங்கிக் கொடுத்து உள்ளார். ஆனால் அந்த கணக்கில் ஜெயாவின் தொலைபேசி எண்ணுக்கு பதிலாக தனது தொலைபேசி எண்ணை ஜெயந்தி இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கணக்கிற்கு ரூ.38 லட்சம் வந்துள்ளது. பணம் பத்திரமாக இருப்பதாக ஜெயாவிடம் ஜெயந்தி கூறியுள்ளார்.
ஆனால் ஜெயாவுக்கு தெரியாமல் ஏடிஎம் கார்டு மூலம் பணத்தை சிறுக சிறுக எடுத்து ஜெயந்தி செலவு செய்து விட்டார். இதை அறிந்த ஜெயா பணத்தை திருப்பி கேட்டபோது பணம் எல்லாம் தர மறுத்துள்ளார்.
பலமுறை மருமகளிடம் கேட்டும் பணம் கிடைக்காததால், வேறு வழியின்றி தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் ஜெயா புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயந்தியிடம் விசாரித்தபோது, தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதையடுத்து ஜெயித்து மீது FIR போடப்பட்டது.
முன்ஜாமீன் பெற நீதிமன்றத்தை நாடிய ஜெயந்தியிடம், நான்கில் ஒரு பங்கு தொகையை நீதிமன்றத்தில் கட்டினால் முன்ஜாமீன் வழங்கப்படும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தையும் அவர் கட்டவில்லை. இதையடுத்து முன்ஜாமீன் கிடைக்காததால், ஜெயந்தியை போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருமணமாகி 6,மாதத்தில் கணவரை இழந்த மருமகளை மகள் போல பார்த்த மாமியாருக்கு, வயதான காலத்தில் ஆதரவாக வந்த பணத்தை மருமகளே மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் தாம்பரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
