Homeசெய்திகள்உலகம்அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: டொனால்ட் டிரம்பின் பொருளாதார போரை எதிர்கொள்ள ஈரான் வகுத்துள்ள...

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: டொனால்ட் டிரம்பின் பொருளாதார போரை எதிர்கொள்ள ஈரான் வகுத்துள்ள ‘3 கட்ட வியூகம்’!

-

- Advertisement -

​​அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் போக்கு தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது அறிவித்துள்ள மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை எந்த ஒரு நாடும் சந்தித்திராத அளவிலான இந்த பொருளாதாரப் போரைச் சமாளிக்க ஈரான் தரப்பில் மூன்று கட்ட சிறப்பு வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: டொனால்ட் டிரம்பின் பொருளாதார போரை எதிர்கொள்ள ஈரான் வகுத்துள்ள '3 கட்ட வியூகம்'!

​’நோ வார், நோ பீஸ்’ இக்கட்டான சூழல்
​தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு என்பது போரும் இல்லாத, அதேசமயம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் வராத ஒரு விவரிக்க முடியாத ‘நோ வார், நோ பீஸ்’ என்ற பதற்றமான சூழலில் உள்ளது. ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் அந்நாட்டை மேலும் முடக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

we-r-hiring

​ஈரானின் 3 கட்ட எச்சரிக்கை வியூகம்
​அமெரிக்காவின் பொருளாதாரப் போரை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஷன் ரசாய் தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி, ஈரான் பின்வரும் மூன்று கட்ட உத்திகளைக் கையாள திட்டமிட்டுள்ளது:

​முதல் கட்டம் (தூதரகப் பேச்சுவார்த்தை): அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுடன் ஈரான் முதற்க்கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பதற்றமான சூழலில் இருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தும்.

​இரண்டாம் கட்டம் (எச்சரிக்கை): பேச்சுவார்த்தைக்குப் பிறகும் அமெரிக்காவுக்கு அந்த நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்தால், அதற்கான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் முறைப்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.

​மூன்றாம் கட்டம் (இலக்கு தாக்குதல்): எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நாடுகளின் நலன்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்.

​வலைகுடா நாடுகளுக்கு சிக்கல்
​ஈரானின் இந்த அதிரடி அறிவிப்பு, அமெரிக்காவின் நட்பு நாடுகளாக விளங்கும் வலைகுடா (கல்ஃப்) நாடுகளை ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. புவியியல் ரீதியாக ஈரானின் அண்டை நாடுகளாக உள்ள இவற்றுக்கு அமெரிக்காவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டுவதா அல்லது ஈரானின் கோபத்திற்கு ஆளாவதா என்ற தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

​மேலும், ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் போன்ற முக்கியமான வர்த்தகப் பாதைகளில் ஏற்கனவே கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதைய சூழல் உலகளாவிய பொருளாதாரத்தில் மேலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

கனடா மீது 50 சதவீத வரி உயர்வை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்: ஆட்டோமொபைல் மற்றும் எஃகுத் துறை வர்த்தகத்தில் பதற்றம்!

MUST READ