உத்தரப் பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டக் கருத்துக்கணிப்பில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) கூட்டணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி (SP) கூட்டணிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.
‘வோட் வைப்’ (VOTE VIBE) நிறுவனம் வெளியிட்ட இந்த ஆய்வின் முடிவுகள், மாநிலத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து விரிவான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன:
முன்னணியில் சமாஜ்வாதி: ஆகஸ்ட் மாத நிலவரப்படி வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், சமாஜ்வாதி கட்சி கூட்டணி 41.2% ஆதரவைப் பெற்றுச் சிறிய அளவில் முன்னிலை வகிக்கிறது.

நெருங்கும் பாஜக: ஆளும் பாஜக கூட்டணி 41.1% ஆதரவுடன் மிக நெருக்கமாகத் தொடர்கிறது.

தொடரும் இழுபறியும் சரிவடையும் பிஎஸ்பியும்
பாஜக மற்றும் சமாஜ்வாதி ஆகிய இரு முதன்மை கூட்டணிகளுக்கும் இடையே வெறும் 0.1% வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளதால், வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதில் பெரும் இழுபறி நீடிப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதேவேளையில், ஒரு காலத்தில் மாநிலத்தின் பிரதான அரசியல் சக்தியாக விளங்கிய பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) செல்வாக்கு 4.4% ஆகக் கடுமையாகச் சரிந்துள்ளது. இதன் காரணமாக, தற்போதைய களநிலவரம் முழுமையாக பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் மோதலாக உருவெடுத்துள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் வெளியாகியுள்ள இந்த ‘வோட் வைப்’ நிறுவனத்தின் கணிப்பு, உத்தரப் பிரதேச மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் ஊழியர்களுக்காக ரூ. 4 கோடி நிதியுதவி: கோவை பெண் பக்தரின் நெகிழ்ச்சி செயல்!

