Homeசெய்திகள்இந்தியா"படுக்கையறையில் வவ்வாலா தொங்குனீங்க?" - பாபா ராம்தேவை பந்தாடிய கங்கனா ரணாவத்! தேசிய அளவில் பரபரப்பு!

“படுக்கையறையில் வவ்வாலா தொங்குனீங்க?” – பாபா ராம்தேவை பந்தாடிய கங்கனா ரணாவத்! தேசிய அளவில் பரபரப்பு!

-

- Advertisement -

இந்தியத் திரைத்துறையிலும் தற்போதைய அரசியல் களத்திலும் தனது அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்துபவர் பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத். அந்த வகையில், தற்போது இந்தியாவின் முன்னணி யோகா குருவான பாபா ராம்தேவ் மற்றும் கங்கனா ரணாவத் இடையே மூண்டுள்ள மோதல், தேசிய அளவில் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது."படுக்கையறையில் வவ்வாலா தொங்குனீங்க?" - பாபா ராம்தேவை பந்தாடிய கங்கனா ரணாவத்! தேசிய அளவில் பரபரப்பு!

என் படுக்கையறையில் வவ்வாலாகத் தொங்கினாரா?
டெல்லியில் நடந்த சில போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்களின் அநாகரிகமான நடத்தையைக் விமர்சிக்கும் வகையில், கங்கனா ரணாவத் ‘ஜெனரேஷன் கட்டர்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு பாபா ராம்தேவ், கங்கனாவின் சிறுவயது மற்றும் இளமைப் பருவம் குறித்து விமர்சனங்களை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

we-r-hiring

இதற்கு ஊடகங்கள் வாயிலாக மிகக் கடுமையான மொழியில் பதிலடி கொடுத்துள்ள கங்கனா ரணாவத்,  “என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும், என்னுடைய கடந்த காலத்தைப் பற்றியும் பேசுவதற்கு பாபா ராம்தேவ் என்ன என்னுடைய படுக்கையறையில் வவ்வாலைப் போலவா தொங்கிக் கொண்டிருந்தார்? என்னுடைய இளமைப் பருவத்தில் அவர் என்னை எங்கே பார்த்தார், அப்படி என்னதான் பார்த்தார் என்று எனக்குப் புரியவில்லை. அவருக்குத் தைரியம் இருந்தால் தான் என்ன பார்த்தேன் என்பதைப் பொதுவெளியில் வெளிப்படையாகச் சொல்லட்டும். அதைவிடுத்து, வதந்திகளையும் அரைகுறை கிசுகிசுக்களையும் நம்பிக் கொண்டு எனக்குக் கற்புநெறி மற்றும் ஒழுக்கப் பாடம் நடத்த அவர் வர வேண்டாம்.” என்று மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆன்மீகவாதி போர்வையில் வியாபாரி
தொடர்ந்து பாபா ராம்தேவின் வர்த்தகப் பேரரசு குறித்து விமர்சித்த கங்கனா, “ஆரம்பத்தில் யோகா, மூலிகைகள் மற்றும் ஆயுர்வேதம் ஆகியவற்றை விளம்பரப்படுத்தி, சுதேசி இயக்கத்தைத் தொடங்கியபோது இந்திய அரசாங்கமே பாபா ராம்தேவை பெரிதும் ஊக்குவித்தது. ஆனால், இன்றைக்கு அவர் ஆன்மீகத்தையும் சனாதனக் கொள்கைகளையும் கைவிட்டு, முழுக்க முழுக்க முதலாளித்துவத்திற்குள் மூழ்கிப்போய் ஒரு முழுநேர வியாபாரியாக மாறிவிட்டார்.

"படுக்கையறையில் வவ்வாலா தொங்குனீங்க?" - பாபா ராம்தேவை பந்தாடிய கங்கனா ரணாவத்! தேசிய அளவில் பரபரப்பு!

சனாதன சித்தாந்தம் என்பது ஒரு கட்டத்தில் முதலாளித்துவத்தோடு கண்டிப்பாக முரண்படும். பாபா ராம்தேவ் ஆயுர்வேதத்தில் தொடங்கி இன்றைக்கு உள்ளாடைகள் மற்றும் பனியன்கள் விற்கும் அளவிற்குத் தனது வணிகப் பேரரசை விரிவுபடுத்தியுள்ளார். ஒருவர் தொழிலதிபராக மாறுவதில் எந்தத் தவறும் இல்லை; ஆனால் ஆன்மீகவாதி என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு இந்த வியாபார நாடகத்தை நடத்தக் கூடாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

உச்ச நீதிமன்றக் கண்டனத்தை சுட்டிக்காட்டி அதிரடி
மேலும், “தவறான மற்றும் மக்களை ஏமாற்றும் விளம்பரங்களை வெளியிட்டதற்காக உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஒரு நபர், இன்றைக்குப் பிறருடைய நடத்தையைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. அடுத்தவர்களின் படுக்கையறையைப் பற்றியும், இளமையைப் பற்றியும் பகற்கனவு காண்பதை நிறுத்திக்கொண்டு, பாபா ராம்தேவ் தனது வணிகத்தை மட்டும் கவனிப்பது நல்லது” என்றும் கங்கனா எச்சரித்துள்ளார். பாஜக எம்பி கங்கனா ரணாவத், நாட்டின் பிரபல யோகா குரு பாபா ராம்தேவை இவ்வாறு பகிரங்கமாகத் தோலுரித்துப் பேசியிருப்பது தேசிய அரசியலிலும் ஆன்மீக வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அது மருமகளின் வேலை அல்ல!— கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

MUST READ