Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன்!” — சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன்!” — சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

-

- Advertisement -

திமுக–விசிக இடையே இருப்பது கொள்கைக் கூட்டணி; பேரவையில் அமைச்சர் வன்னி அரசு – உதயநிதி ஸ்டாலின் சுவாரசிய விவாதம்! என்னுடைய அரசியல் ஆசான் திருமாவளவன்!” — சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே நடைபெற்ற விவாதம் பேரவையில் பெரும் கவனத்தைப் பெற்றது.

we-r-hiring

அமைச்சர் வன்னி அரசுவின் உரையும் கேள்வியும்:  சமூகநீதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரையாற்றிப் பேசிய அமைச்சர் வன்னி அரசு:

கடந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எனக்காகப் பிரச்சாரம் செய்து எனது வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். அவருக்கு நாங்கள் தொடர்ந்து நன்றியைக் கூறி வருகிறோம். ஆனால் திமுகவினர், எங்கள் தலைவர் திருமாவளவனுக்கு உரிய நன்றியைத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.

நன்றி என்பது இரு தரப்பிற்கும் பொதுவானது. நாங்களும் உங்களைப் பாராட்டியிருக்கிறோம், நீங்களும் எங்களைப் பாராட்டியிருக்கிறீர்கள். இரு தரப்பிலும் உழைப்பும் வாக்குகளும் சமமாக இருக்கும் போது, விசிக-விற்கு நன்றி கூறப்படாதது ஏன் என்ற ஆதங்கம் உள்ளது.

நாங்கள் எப்போதும் நன்றிக்குரியவர்கள் என்பதை இந்த அவையில் பதிவிடுகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதில்:  அமைச்சரின் பேச்சுக்கு உடனடியாகப் பதிலளித்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:  அமைச்சர் வன்னி அரசு அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார், எனக்கும் நன்றி தெரிவித்தார். எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எழுச்சித் தமிழர் அண்ணன் திருமாவளவனுக்கும் இடையே இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்குப் பின்னரோ சூழலுக்கு ஏற்ப மாறும் கூட்டணியும் அல்ல இது கொள்கை ரீதியிலான உறுதியான கூட்டணி.

நான் பல மேடைகளில் பெருமையோடு சொல்லியிருக்கிறேன் என்னுடைய அரசியல் ஆசான் என்றால் அது அண்ணன் திருமாவளவன் தான் எனவே, அண்ணன் திருமாவளவனுக்கும் விசிக-விற்கும் திமுகவின் நன்றி என்றென்றும் தொடரும் எனக் கூறி அமர்ந்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்தப் பேச்சு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பெரும் பலத்த கரகோஷத்தைப் பெற்றது.

“உள்நோக்கம் கொண்ட வழக்கு! மனுவை தள்ளுபடி செய்யுங்க.. சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் அதிரடி மனு!”

MUST READ