Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்.ஜி.ஆர் பாடல் பாடிய அமைச்சர் சம்பத் குமார்; கிண்டலடித்த உதயநிதி ஸ்டாலின் - சட்டமன்றத்தில் சுவாரஸ்யம்!

எம்.ஜி.ஆர் பாடல் பாடிய அமைச்சர் சம்பத் குமார்; கிண்டலடித்த உதயநிதி ஸ்டாலின் – சட்டமன்றத்தில் சுவாரஸ்யம்!

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் துறைகள் ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.எம்.ஜி.ஆர் பாடல் பாடிய அமைச்சர் சம்பத் குமார்; கிண்டலடித்த உதயநிதி ஸ்டாலின் - சட்டமன்றத்தில் சுவாரஸ்யம்!

நேற்று (27-08-2026) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதித்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது. நேரமின்மை காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலுரை அளிக்கப்படாமலேயே நேற்றைய கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

we-r-hiring

விலைவாசி உயர்வு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம்
இந்நிலையில், இன்று (28-08-2026) காலை பேரவை மீண்டும் கூடியதும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு விவகாரம் குறித்து திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இதன் மீது விவாதம் நடைபெற்றதைத் தொடர்ந்து, நேற்றைய தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான கேள்விகளுக்கு அத்துறையின் அமைச்சர் சம்பத் குமார் பதிலளித்துப் பேசத் தொடங்கினார்.

அவையில் ஒலித்த எம்.ஜி.ஆர் பாடல்
அமைச்சர் சம்பத் குமார் தனது பதிலுரையின் போது, தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று… மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்… தன் மக்கள் நலம் ஒன்றைத்தான் மனதில் கொள்ளுவார்” என்ற புகழ்பெற்ற எம்.ஜி.ஆர் பாடலைப் பாடினார். தொடர்ந்து பேசிய அவர், “மக்களுக்காகக் கிள்ளிக் கொடுத்துவிட்டு, தன் சொந்த மக்களுக்காக அள்ளிக் கொடுத்ததைச் சுட்டிக்காட்டவே அன்றைக்கு எம்.ஜி.ஆர் இந்தப் பாடலைப் பாடினார்” என்று விளக்கமளித்தார்.

திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு – அவையில் அமளி
அமைச்சர் துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பாடல் பாடி அரசியல் பேசுவதாகக் கூறி, திமுக எம்.எல்.ஏ-க்கள் உடனடியாக எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பமும் அமளியும் நிலவியது.

நகைச்சுவையாகப் பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
இதையடுத்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “நேற்றே சொல்லியிருக்க வேண்டிய பதிலுரையை அமைச்சர் இன்றைக்குத் தான் தொடங்கியிருக்கிறார். வந்தவுடனேயே பாட்டுப் பாட ஆரம்பித்துவிட்டார். இதில் பாடலுக்கு சாட்சிக்கு வேறு என்னை இழுக்கிறார், அதனால் நாங்கள் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்” என்று புன்னகையுடன் பேசினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த நகைச்சுவையானப் பேச்சைக் கேட்டு, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிரித்ததால், பேரவையில் நிலவிய பரபரப்பான சூழல் மாறி சிரிப்பலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து துறை தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

NEET UG 2026: மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய update! முதல் சுற்று MBBS, BDS இடஒதுக்கீடு – எப்படி தெரிந்துகொள்வது?

MUST READ