Homeசெய்திகள்தமிழ்நாடு100 நாளில் 1 லட்சம் கோடியா? எண்களை வச்சு ஏமாத்துறாங்க.. விஜய்யின் 'நம்பர் கேம்' ரகசியத்தை...

100 நாளில் 1 லட்சம் கோடியா? எண்களை வச்சு ஏமாத்துறாங்க.. விஜய்யின் ‘நம்பர் கேம்’ ரகசியத்தை உடைத்த கேப்ரியல் தேவதாஸ்!

-

- Advertisement -

தமிழ்நாடு அரசியலில் தற்போதைய கள நிலவரங்கள், தவெகவின் சமூக வலைத்தள உத்திகள் மற்றும் கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு குறித்து ஊடகவியலாளர் கேப்ரியல் தேவதாஸ் (Gabriel Devadoss)  பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.100 நாளில் 1 லட்சம் கோடியா? எண்களை வச்சு ஏமாத்துறாங்க.. விஜய்யின் 'நம்பர் கேம்' ரகசியத்தை உடைத்த கேப்ரியல் தேவதாஸ்!சமூக வலைத்தளங்களும் எண்களின் மாயாஜாலமும்
நேர்காணலில் பேசிய அவர், “தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெறும் சம்பவங்களை தவெகவினர் வெறும் ரீல்ஸ்களாக மட்டும் மாற்றுவதில்லை; அதற்கென ஒரு தனி மெக்கானிசத்தையே வைத்துள்ளனர். ஆட்சியில் 100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைக் கொண்டுவந்துவிட்டோம் என்று கூறுவது தவறான வழிகாட்டுதலாகும். அவை வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) மட்டுமே. பொதுவாக இத்தகைய ஒப்பந்தங்களில் 15 முதல் 30 சதவீத முதலீடுகளே நீண்ட காலத்தில் நடைமுறைக்கு வரும். எண்களை வைத்து மக்களை ஏமாற்றும் வேலையை தவெக தீவிரமாகச் செய்கிறது” என்றார்.

மேலும், 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு எனக் கூறுவது ஒரு ‘கிமிக்’ (Gimmick) என்றும், தற்போதைய பொருளாதார அளவை விட வீம்பிற்காகப் பெரிய எண்களைத் தவெக சொல்லி வருகிறது என்றும் சாடினார்.

we-r-hiring

வட மாநில உத்தியும் 2029 தேர்தல் திட்டமும்
 வட மாநிலங்களில் விஜய் குறித்த காணொளிகளும் ரீல்ஸ்களும் பரப்பப்படுவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “2024 தேர்தலில் பாஜகவுக்குத் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 2029-ல் பாஜக மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளது. அப்போது தேசிய அளவில் பிராந்தியக் கட்சிகளின் தேவை அதிகரிக்கும். அந்த இடத்தைக் குறிவைத்தே தவெக வட மாநிலங்களில் இன்ஸ்டா இன்ஃபுளூயன்சர்கள் (Insta Influencers) மூலம் தங்களைப் பற்றிய பிம்பத்தைக் கட்டியமைத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

100 நாளில் 1 லட்சம் கோடியா? எண்களை வச்சு ஏமாத்துறாங்க.. விஜய்யின் 'நம்பர் கேம்' ரகசியத்தை உடைத்த கேப்ரியல் தேவதாஸ்!

பரந்தூர் விவகாரமும் தொழில் துறையின் அச்சமும்
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, புதிய இடத்தை மீண்டும் முதலிலிருந்து தேர்வு செய்யப்போவதாக அறிவித்திருப்பது தொழில் துறைக்கு அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. சி.ஐ.ஐ (CII) போன்ற தொழிலமைப்பு அமைப்புகள் இதனால் கவலையில் உள்ளன. அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்கு இருக்கும் உள்கட்டமைப்பை மட்டுமே வைத்து மேனேஜ் செய்ய வேண்டிய நிலை உருவாகும். சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதும் கேள்விக்குறியே.

கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு — ஸ்டாலினுக்கு பின்னடைவா?
ளத்தூர் தொகுதியில் பெற்ற தோல்வியை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு பற்றிப் பேசிய கேப்ரியல் தேவதாஸ்: “எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தனது கோட்டையைப் பலமாக வைத்துள்ளார். ஆனால், கொளத்தூரில் ஸ்டாலின் சுமார் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது அவரது கவனக்குறைவையே காட்டுகிறது.100 நாளில் 1 லட்சம் கோடியா? எண்களை வச்சு ஏமாத்துறாங்க.. விஜய்யின் 'நம்பர் கேம்' ரகசியத்தை உடைத்த கேப்ரியல் தேவதாஸ்!

இந்தத் தேர்தல் வழக்கின் மூலம் சட்டரீதியாகப் பெரிய மாற்றங்கள் அல்லது நிவாரணங்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இருப்பினும், ‘தோல்விக்குத் தொண்டர்கள் காரணமில்லை, முறைகேடுகளே காரணம்’ என்பதைத் திமுக தொண்டர்களுக்கு உணர்த்துவதற்கும், கடந்த 100 நாட்களாக அரசியல் லைம்லைட்டில் (Lightlight) இல்லாத ஸ்டாலின் தனது அரசியல் இருப்பைக் காட்டிக் கொள்வதற்கும் இந்த வழக்கு ஒரு உத்தியாகப் பயன்படும்” எனத் தெரிவித்தார்.

100 நாள் ஆட்சியிலேயே சந்தி சிரிக்கும் நிர்வாகம்! பிரதமர் நாற்காலி கேட்குதோ? விஜய்யை கிழித்து தொங்கவிட்ட வல்லம் பஷீர்!

MUST READ