Homeசெய்திகள்தமிழ்நாடு100 நாள் ஆட்சியிலேயே சந்தி சிரிக்கும் நிர்வாகம்! பிரதமர் நாற்காலி கேட்குதோ? விஜய்யை கிழித்து தொங்கவிட்ட...

100 நாள் ஆட்சியிலேயே சந்தி சிரிக்கும் நிர்வாகம்! பிரதமர் நாற்காலி கேட்குதோ? விஜய்யை கிழித்து தொங்கவிட்ட வல்லம் பஷீர்!

-

- Advertisement -

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் எந்தவொரு அரசும், தங்களின் முதல் சில நூறு நாட்களிலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மற்றும் நிர்வாகத்தைச் சீராகக் கொண்டு செல்வது ஆகியவைதான் ஒரு புதிய முதலமைச்சரின் முதன்மைப் பணிகளாக இருக்க வேண்டும்.

100 நாள் ஆட்சியிலேயே சந்தி சிரிக்கும் நிர்வாகம்! பிரதமர் நாற்காலி கேட்குதோ? விஜய்யை கிழித்து தொங்கவிட்ட வல்லம் பஷீர்!

we-r-hiring

ஆனால், கள நிலவரங்களைச் சரிசெய்யாமல், தங்களின் தலைவர்களை அடுத்த கட்டப் பதவிகளில் அமர வைப்பதற்கான விளம்பரங்களிலும், அதீத கற்பனைகளிலும் கட்சிகள் மூழ்கும்போது, அது பொதுமக்களிடையே பெரும் விமர்சனங்களை உருவாக்குகிறது.  இதுதொடர்பாக political critic (அரசியல் விமர்சகர்) வல்லம் பஷீர் தவெகவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துத் தனது கடுமையான பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார்.

நிர்வாகச் சீர்கேடும் அதீதக் கூச்சலும்
 “தவெக நிர்வாகிகளுக்கு இப்போது எதற்குப் பிரதமர் நாற்காலி குறித்த இந்த அதீத காட்டுக்கூச்சல் என்று எனக்குப் புரியவில்லை. விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இன்னும் 100 நாட்கள் கூட முழுமையாக முடிவடையவில்லை; அதற்குள்ளாகவே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்கெட்டுச் சந்தி சிரித்துக் கொண்டு கிடக்கிறது. மாநிலத்தில் நிலவும் இத்தனை குளறுபடிகளையும், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளையும் சரி செய்யவே இன்னும் உங்களால் முடியவில்லை” என்று சாடினார்.

100 நாள் ஆட்சியிலேயே சந்தி சிரிக்கும் நிர்வாகம்! பிரதமர் நாற்காலி கேட்குதோ? விஜய்யை கிழித்து தொங்கவிட்ட வல்லம் பஷீர்!

மேலும் தொடர்ந்த அவர், “இந்த லட்சணத்தில், தங்களின் ஆட்சி அதிகாரத்தையே முறையாகக் கொண்டு செலுத்தத் துப்பில்லாத தவெகவினர், அதற்குள் 2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து விஜயைப் பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்கத் துடிக்கிறார்கள். இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் முழுமையாக அவகாசம் இருக்கும்போதே, வட மாநிலங்களில் விஜயைப் பற்றி ரீல்ஸ் மற்றும் ஷாட்ஸ் வீடியோக்களைப் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்” எனக் குற்றம் சாட்டினார்.100 நாள் ஆட்சியிலேயே சந்தி சிரிக்கும் நிர்வாகம்! பிரதமர் நாற்காலி கேட்குதோ? விஜய்யை கிழித்து தொங்கவிட்ட வல்லம் பஷீர்!

ஜோதிடரின் பிதற்றலும் கற்பனை உலகமும்
தவெக நிர்வாகிகளின் மனநிலையைக் கடுமையாக விமர்சித்த அவர், “தவெகவின் அதிகாரப்பூர்வ ஆலோசகராக இருக்கிற ஒரு ஜோசியக்காரர், ஊடகங்களில் வந்து ‘அண்ணன் விஜய் நாளைக்கு அமெரிக்க அதிபர் ஆக வேண்டும்’ என்று பிதற்றுகிறார். தவெகவினரின் மனநிலை எப்படி இருக்கிறது என்றால், ‘நம்ம அண்ணன் இன்றைக்கு முதலமைச்சர், நாளைக்கு நாட்டின் பிரதமர், நாளை மறுநாள் அமெரிக்காவினுடைய ஜனாதிபதி’ என்கிற அதீத கற்பனை உலகத்தில் மிதக்கிறார்கள்” என்றார்.

கூட்டணிக் குழப்பங்களுக்கு வழியமைக்கும் பேச்சுகள்
கூட்டணி அரசியல் குறித்துப் பேசிய வல்லம் பஷீர், “இப்பதான் பாஜக போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்சில் வேலை செய்து, திமுகவோடு இருந்த கூட்டணியை உடைத்துக் கொண்டு வந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கிறீர்கள். வந்த கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ளும் வேலையைப் பார்க்காமல், மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் எகிறிக் குதிப்பதற்குக் தவெகவினரே தங்களின் முட்டாள்தனமான பேச்சுகளால் வழியமைத்துக் கொடுக்கிறார்கள்” என்று காட்டமாகக் கூறியுள்ளாா்.

சட்டமன்றத்தில் பரபரப்பு: திடீரென இருக்கையை மாற்றி அமர்ந்த முதல்வர் விஜய்! 

MUST READ