Homeசெய்திகள்தமிழ்நாடுஓட்டக் கண்ணாடி போட்டுக்கிட்டு இவ்வளவு தைரியமா? விஜய்யை வம்பு இழுத்த தராசு ஷ்யாம்.. பின்னணி என்ன?

ஓட்டக் கண்ணாடி போட்டுக்கிட்டு இவ்வளவு தைரியமா? விஜய்யை வம்பு இழுத்த தராசு ஷ்யாம்.. பின்னணி என்ன?

-

- Advertisement -

தமிழக வெற்றி கழகத் (தவெக) தலைவரும் பிரபல நடிகருமான விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் திட்டமிடுதல்கள் அனைத்தும், அவரது ஆஸ்தான ஜோதிடரான ரத்தன் பண்டிட் என்பவரின் அறிவுறுத்தலின் பேரிலேயே அரங்கேறி வருவதாக வெளியாகி உள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. ஓட்டக் கண்ணாடி போட்டுக்கிட்டு இவ்வளவு தைரியமா? விஜய்யை வம்பு இழுத்த தராசு ஷ்யாம்.. பின்னணி என்ன?

இந்தக் கருத்தின் பின்னணியில் உள்ள அரசியல் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக விவரித்த மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான முனைவர் தராசு ஷ்யாம் கூறியிருப்பதாவது, “அரசியல் களத்தில் கற்பனைக் கோட்டைகளைக் கட்டுவது மிகவும் இயல்பான ஒன்று. ஆனால், அந்தக் கற்பனைக் கோட்டையின் காரைச் சுவர்கள் காலப்போக்கில் பலமுறை உதிர்ந்து விழுவதை நான் நேரில் கண்டிருக்கிறேன். தமிழகத்தில் ஒரு மாநிலக் கட்சியின் தலைவருக்கான செல்வாக்கு என்பது அந்த மாநில எல்லைக்குள் மட்டுமே நிலைத்து நிற்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.

we-r-hiring

தொகுதி மறுசீரமைப்பும் கூட்டணிச் சிக்கலும்
எதிர்காலத்தில் பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) நடைமுறைக்கு வரும்போது, தமிழகத்திற்கான எம்பி தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அவ்வாறு தொகுதிகள் அதிகரிக்கும் போது, கூட்டணியில் இடம்பெறும் தேசியக் கட்சிகள் அதிக அளவிலான இடங்களை எதிர்பார்க்கும். எடுத்துக்காட்டாக, தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 20% இடங்களைக் கோரினால் மட்டுமே 15 முதல் 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டியிருக்கும். இதுதவிர, கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் கணிசமான தொகுதிகளை வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

“ஓட்டக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு உனக்கு எப்படிப்பா இவ்வளவு தைரியம் வருது?” – தராசு ஷ்யாம் சாடல்

இத்தகைய கூட்டணிப் பங்கீடுகளுக்குப் பிறகு, தவெக போட்டியிடக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 35 ஆக மட்டுமே சுருங்கும். வெறும் 35 எம்பி தொகுதிகளில் போட்டியிட்டுக்கொண்டு, மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவையான 80 முதல் 90 எம்பி-க்களைப் பெற்று பிரதமர் பதவியைப் பிடிக்க நினைப்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்று தராசு ஷ்யாம் விளக்கினார்.ஓட்டக் கண்ணாடி போட்டுக்கிட்டு இவ்வளவு தைரியமா? விஜய்யை வம்பு இழுத்த தராசு ஷ்யாம்.. பின்னணி என்ன?

வரலாற்றுத் தவறுகளும் ஜோதிட மயக்கமும்
கடந்த காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2014-இல் பிரதமர் வேட்பாளர் என ஜோதிடக் கணிப்புகள் கூறப்பட்டதையும், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஜோதிட நம்பிக்கையால் தனது கட்சியின் பெயரை பிஆர்எஸ் என மாற்றியதையும் நினைவுகூர்ந்த அவர், கவுண்டமணியின் பிரபல நகைச்சுவை வசனத்தைக் மேற்கோள் காட்டி “இந்த ஓட்டக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு உனக்கு எப்படிப்பா இவ்வளவு தைரியம் வருது?” எனத் தவெக-வின் அகில இந்திய அரசியல் ஆசையைக் கடுமையாக விமர்சித்தார்.

மேலும் விஜய் நம்பக்கூடிய ஜோதிடர், 200 ஆண்டுகளுக்குத் தமிழகத்திற்குத் தண்ணீர்ப் பிரச்சினையே இருக்காது என்றெல்லாம் சாத்தியமில்லாத திட்டங்களைப் பேசுபவர் என்றும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே ஜோதிடப் பணிகளைச் செய்து பல்வேறு சிக்கல்களில் சிக்கியவர் என்றும் கூறினார். பின்னர் டெல்லி மற்றும் சிங்கப்பூருக்குச் சென்று பெயர் மாற்றம் செய்து கொண்டு, தற்போது விஜய்யிடம் வந்து சேர்ந்துள்ளார் என அந்த ஜோதிடரின் பின்னணியையும் அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.ஓட்டக் கண்ணாடி போட்டுக்கிட்டு இவ்வளவு தைரியமா? விஜய்யை வம்பு இழுத்த தராசு ஷ்யாம்.. பின்னணி என்ன?

அண்டை மாநில நகர்வுகளும் கூட்டணி ஆபத்தும்
கேரளாவில் சினிமா நட்சத்திரம் தேவனை வைத்தும், கர்நாடகாவில் ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளரை வைத்தும் தவெக களமிறங்க முயற்சிப்பது அரசியல் ரீதியாக ஒரு தவறான நகர்வாகும். கேரளாவில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டுகளும் பிரதான எதிரெதிர் அரசியல் சக்திகளாக விளங்குகின்றன. அங்கு தவெக ஊடுருவ முயன்றால், அது தமிழக அரசுக்கு அம்மாநில கட்சிகள் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறச் செய்யும் நிலைமைக்குத் தள்ளிவிடும். அதேபோல, காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் மேகதாட்டு அணையைக் கட்டுவோம் எனத் தொடர்ந்து வலியுறுத்தும் போது, அதை எதிர்த்து விஜய் தனது தெளிவான குரலைப் பதிவு செய்யவில்லை. அண்டை மாநிலங்களில் அரசியல் செய்ய நினைக்கும் போது இத்தகைய இரட்டை நிலைப்பாடு மாநில அரசியல் தன்னாட்சியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எச்சரித்தார்.

பிரதமர் கனவு பகற்கனவே!
இறுதியாக, “சுற்றி இருப்பவர்கள் சினிமா ஸ்டார் மைண்ட்செட்டில் கொம்பு சீவி விடுவதைக் கேட்டு அனாவசியமான கற்பனைகளை வளர்த்துக்கொள்ளக் கூடாது. அரசியலில் அடைய துடித்தல், அடைந்து விடுதல், அடைந்ததைத் தக்க வைத்துக்கொள்ளுதல் என்ற மூன்று சூத்திரங்கள் மட்டுமே முதன்மையானவை. தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து அரசியலை நிலைநிறுத்துவதற்கே நீண்ட காலம் பிடிக்கும் சூழலில், தேசிய அரசியலில் 100 சீட்களை ஜெயித்து பிரதமர் ஆகலாம் என்று நினைப்பது முற்றிலும் ஒரு பகற்கனவே” என்று தராசு ஷ்யாம் தனது பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆட்டோ ஓட்டுநர் TO எம்.எல்.ஏ – சட்டப்பேரவையில் ராயபுரம் எம்.எல்.ஏ விஜய் தாமு நெகிழ்ச்சி உரை!

MUST READ