Homeசெய்திகள்தமிழ்நாடுதிருமண நாளில் திருப்பதியில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு...

திருமண நாளில் திருப்பதியில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வலியுறுத்தல்!

-

- Advertisement -

கர்நாடக அரசு வேகமாக காய்களை நகர்த்தி வருகிறது; தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க பாமக தலைவர் கோரிக்கை!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தனது திருமண நாளை முன்னிட்டு இன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.திருமண நாளில் திருப்பதியில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வலியுறுத்தல்!

இன்று காலை திருமலைக்கு வருகை தந்த அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி சௌமியா அன்புமணி மற்றும் குடும்பத்தினருக்குத் தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஏழுமலையானை வழிபாட்டுத் திரும்பிய அவருக்குத் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

we-r-hiring

காவிரி விவகாரத்தில் கர்நாடகா வேகம்:
கோயில் வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், காவிரி நீர் பங்கீடு குறித்துப் பேசுகையில்:

கர்நாடக அரசு மேகதாது அணை விவகாரத்திலும் காவிரி நீர் பங்கீட்டிலும் மிக வேகமாகத் தனது காய்களை நகர்த்தி வருகிறது. அவர்களின் இந்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளன.

காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும், அடுத்து எடுக்கப்பட வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை விவாதிக்கவும் தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும்.

மேலும், தமிழக எல்லைப் பகுதிகளில் நிலவும் குடிநீர் மற்றும் விவசாயப் பாசனப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணத் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியின் போது வலியுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் விலைவாசி உயர்வு விவகாரம் வெடிப்பு! உதயநிதி–EPS காரசார விவாதம்

MUST READ