Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுகவில் 110 மாவட்டங்கள்"- சேகர்பாபு, செந்தில் பாலாஜி அதிகாரத்தில் அதிரடி மாற்றம்?

திமுகவில் 110 மாவட்டங்கள்”- சேகர்பாபு, செந்தில் பாலாஜி அதிகாரத்தில் அதிரடி மாற்றம்?

-

- Advertisement -

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110 ஆக உயர்த்தி அக்கட்சியின் தலைமை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகச் தலைநகர் சென்னையில் திமுக மாவட்டங்களின் எண்ணிக்கை 6-லிருந்து 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொளத்தூர் கைமாறுகிறதா? சேகர்பாபுவின் அதிகாரம் குறைப்பு:
தற்போது சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ள பி.கே. சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்து வந்தன. புதிய மறுசீரமைப்பின் படி, சென்னை கிழக்கு மாவட்டத்தின் கீழ் துறைமுகம், திரு.வி.க. நகர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய 3 தொகுதிகள் மட்டுமே வரும் எனக் கூறப்படுகிறது.

we-r-hiring

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார். இத்தோல்விக்கு மாவட்டச் செயலாளரான சேகர்பாபு தொகுதியைச் சரியாகக் கண்காணிக்காததே காரணம் எனக் கட்சியினரிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் பின்னணியில், கொளத்தூர் தொகுதிக்கு விரைவில் புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டு, நிர்வாகப் பொறுப்புகள் புதிய நபரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை & கரூரில் அதிரடி மாற்றங்கள்:
சென்னை வடக்கு மா.செ மாற்றம்:
சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பில் இருக்கும் ஆர்.டி. சேகரும் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செந்தில் பாலாஜிக்குச் செக்: இதேபோலக் கரூரில் செந்தில் பாலாஜி வசம் இருந்த கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு, நிர்வாக வசதிக்காகக் கரூர் மேற்கு மற்றும் கரூர் கிழக்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பின்னடைவுகளுக்குப் பிறகு உட்கட்சியை முற்றிலும் மறுசீரமைத்து, புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் திமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

அகில இந்திய அரசியலா? அல்லது தமிழ்நாடு ஆட்சியா? – விஜய்க்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தரும் அட்வைஸ்!

MUST READ