Homeசெய்திகள்தமிழ்நாடுவயிற்றில் அடிக்கும் விலைவாசி! 100 ரூபாய் பொருள் ₹300.. சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டில் விழுந்த இடி!

வயிற்றில் அடிக்கும் விலைவாசி! 100 ரூபாய் பொருள் ₹300.. சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டில் விழுந்த இடி!

-

- Advertisement -

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரிசி, பால், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இந்தத் திடீர் விலைவாசி உயர்வால் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.வயிற்றில் அடிக்கும் விலைவாசி! 100 ரூபாய் பொருள் ₹300.. சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டில் விழுந்த இடி!

அன்றாடம் வேலைக்குச் சென்று ஈட்டும் சொற்ப வருவாயைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வரும் நிலையில், சிறு வியாபாரிகளும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் வேதனை தெரிவிக்கின்றனர்.

we-r-hiring

“100 ரூபாய் பொருள் 300 ரூபாயாக உயர்வு” – பொதுமக்கள் குமுறல்
விலைவாசி உயர்வு குறித்து பரமக்குடியைச் சேர்ந்த பாண்டிமீனா கூறுகையில்,  “தமிழகத்தில் பெண்களுக்குப் பேருந்தில் இலவசப் பயணம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்களுக்கு இதுபோன்ற இலவசங்கள் வேண்டாம்; மாறாக அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தினாலே போதுமானது. முன்பெல்லாம் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருட்களின் விலை தற்போது மூன்று மடங்கு அதிகரித்து 300 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது. கடுமையான விலைவாசி உயர்வால் குடும்பத்தில் எதையுமே சேமிக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

வியாபாரம் முடக்கம்: ஜூஸ் கடை உரிமையாளர் வேதனை
பரமக்குடியில் கடந்த 20 ஆண்டுகளாக பழ ஜூஸ் கடை நடத்தி வரும் விஜயகுமார் கூறுகையில், “நான் கடை தொடங்கும்போது ஒரு கிலோ சர்க்கரை 16 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் தற்போது கிலோ 75 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. முன்பு சில்லறை விற்பனையில் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் மட்டுமே உயரும். ஆனால் தற்போது ஒரே மாதத்தில் கிலோவுக்கு 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை அதிகரித்த போதிலும் வாடிக்கையாளர்கள் குறைந்துவிடுவார்கள் என்ற அச்சத்தால் ஜூஸ் விலையை உயர்த்த முடியவில்லை.

முன்பு ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் முதலீடு செய்தால் 3,000 ரூபாய் வரை வருமானம் கிடைத்து, 1,000 ரூபாய் லாபம் தங்குகியது. ஆனால் இப்போது முதலீடே அதிகரித்துவிட்டதால், நாள் முழுதும் உழைத்தாலும் வெறும் 500 ரூபாய் மட்டுமே லாபமாகக் கிடைக்கிறது” என்று தனது இழப்பை விவரித்தார்.

சிறுதானியங்கள் விலை உயர்வால் கூழ் வியாபாரம் பாதிப்பு
அதே பகுதியில் 10 ஆண்டுகளாக கூழ் கடை நடத்தி வரும் இந்துமதி கூறுகையில், “கூழ் தயாரிப்பதற்குத் தேவையான கம்பு, கேப்பை உள்ளிட்ட சிறுதானியங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் கிலோ 30 ரூபாய்க்கு வாங்கப்பட்ட சிறுதானியங்கள் தற்போது 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. இதுமட்டுமன்றி, தொட்டுக்கொள்ள பயன்படும் கத்திரிக்காய் வத்தல், மிளகாய் வத்தல் மற்றும் சமையல் எண்ணெய்யின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களுக்குச் சுமை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகக் கூழின் விலையை நா நாங்கள் உயர்த்தவில்லை. இதனால் கிடைக்கும் லாபம் குறைந்து, குழந்தைகளுக்குச் சிறிய அளவிலான சேமிப்பைக் கூடச் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது” என்று கவலையுடன் தெரிவித்தார். இந்த விலை ஏற்றம் தொடர்பாக  தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரமக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இ-கேஒய்சி (eKYC) கைரேகை பதிவு: இன்று சிறப்பு முகாம்கள் தொடக்கம்!

MUST READ