Homeசெய்திகள்இந்தியா2029 பிரதமர் ரேஸில் விஜய்யா? சும்மா கிளப்பி விடுறாங்களா? கருத்துக்கணிப்புக்கு பின்னால் இருக்கும் "ரகசியம்"!

2029 பிரதமர் ரேஸில் விஜய்யா? சும்மா கிளப்பி விடுறாங்களா? கருத்துக்கணிப்புக்கு பின்னால் இருக்கும் “ரகசியம்”!

-

- Advertisement -

இந்தியாவின் அடுத்த பிரதமராக மீண்டும் நரேந்திர மோடிக்கே அதிக வாய்ப்பிருப்பதாகவும், அகில இந்திய அளவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் 9 சதவீத ஆதரவுடன் 3-ஆம் இடத்தில் இருப்பதாகவும் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.2029 பிரதமர் ரேஸில் விஜய்யா? சும்மா கிளப்பி விடுறாங்களா? கருத்துக்கணிப்புக்கு பின்னால் இருக்கும் "ரகசியம்"!

“இந்நிலையில், இந்தக் கருத்துக்கணிப்பானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், ஊடக வர்த்தகம் மற்றும் அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு ‘போலி பிம்பம்’ என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.”

we-r-hiring

ஊடகத் தர்மத்தை மீறி வணிகமாகும் சர்வே கலாச்சாரம்
ஒரு காலத்தில் இந்திய ஊடகத்துறையில் மிகப்பெரிய செல்வாக்குடன் விளங்கிய இதழ்கள், காலப்போக்கில் டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடகப் போட்டிகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பின்னடைவைச் சந்தித்தன. அதன்பின்னர், வணிக நோக்கத்திற்காகக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் உணவகங்களுக்கு ‘டாப் 10’ (Top 10 Rankings) தரவரிசைச் சான்றிதழ்கள் வழங்கி விளம்பர வருவாய் ஈட்டும் வழியைப் பின்பற்றத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது நம்பகத்தன்மையற்ற தேர்தல் கருத்துக்கணிப்பு வணிகத்திலும் முன்னணி நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலக் கணிப்புகளும் துல்லியமின்மையும்
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது, பாஜக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் எனத் திட்டவட்டமாகக் கணித்து வெளியிடப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகளில் பாஜக தனித்து 240 இடங்களை மட்டுமே கைப்பற்றி பின்னடைவைச் சந்தித்தது.

இவ்வளவு பெரிய தவறான கணிப்புகளை வழங்கிய அதே அமைப்புகள், தற்போது 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை முன்னிறுத்தி மீண்டும் ஒரு நம்பகத்தன்மையற்ற தரவை வெளியிட்டிருப்பது கேலிக்கூத்தானது என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பின் பின்னணியிலுள்ள அரசியல் உள்நோக்கம்கடந்த சில மாதங்களாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமைகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இந்த சர்வே திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது:

  • பிரதமர் நரேந்திர மோடி: மீண்டும் மோடிக்கே 45-50% மக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, மக்கள் மத்தியில் அவருக்கு மீண்டும் ஒரு சாதகமான அரசியல் அலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
  • ராகுல் காந்தி: 25-30% ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் ராகுல் காந்தி இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் தரப்போ அல்லது ராகுல் காந்தியோ தங்களை அதிகாரப்பூர்வமாகப் பிரதமர் வேட்பாளராக முன்வைக்காத நிலையில், அவரைப் பலவீனமாகக் காட்டுவதற்காகவே இந்த புள்ளிவிவரம் சேர்க்கப்பட்டுள்ளது.
  • நடிகர் விஜய்: அகில இந்திய அளவில் 9% ஆதரவுடன் நடிகர் விஜய் 3-ஆம் இடத்தில் இருப்பதாகக் காட்டுவது, புதிதாக உருவெடுத்துள்ள தமிழக அரசியல் களம் மற்றும் அவரது ரசிகர் பட்டாளத்தை மையமாகக் கொண்டு ஊடக விளம்பர வருவாயைப் பெருக்கும் ஒரு தந்திரமே ஆகும்.

தொலைக்காட்சி விவாதங்களும் திட்டமிட்ட கதையாடலும்
இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, பிற முன்னணி செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் இதழ்களில் விவாதங்களை (Debates) நடத்துவதற்காகப் பெருந்தொகை கைமாறுவதாகவும், இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட அரசியல் பிம்பத்தை (Narrative) திணிக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் அச்செய்தி அம்பலப்படுத்தியுள்ளது.

தற்போது சர்வதேச அளவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைமைகளுக்கு எதிராகவும், அதன் முக்கியத் தலைவர்களுக்கு எதிராகவும் பல அரசியல் மற்றும் சட்டரீதியான நெருக்கடிகள் எழுந்து வருகின்றன. இத்தகைய பின்னடைவுகளை மக்கள் பார்வையில் இருந்து மறைத்து, ‘மோடியே மீண்டும் அதிகாரத்திற்கு வருவார்’ என்ற பிம்பத்தைக் கட்டமைப்பதே இக்கருத்துக்கணிப்பின் முதன்மை நோக்கம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

சிலிண்டர் மானியம் ரூ.50 உயர்வு; மீனவ மாணவர்களுக்கு முழு கல்வி உதவித்தொகை: புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

MUST READ