ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் மற்றும் அமைச்சர் சம்பத்குமார் நேரில் வரவேற்பு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகக் கோவை வருகை தந்த இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, விமான நிலையத்தில் ஆளுநர் மற்றும் அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புத்தகம் வழங்கி வரவேற்பு:
கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ஆளுநர் மற்றும் அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் ‘ஜோசப் விஜய் உன் பேரே வரலாறு’ என்ற தலைப்பிலான புத்தகத்தைத் துணைக் குடியரசுத் தலைவருக்குப் பரிசாக வழங்கி கௌரவித்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர் மற்றும் முக்கியக் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உடன் இருந்தனர். துணைக் குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி கோவை மாநகர் முழுவதும் பலத்த போலஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
