Homeசெய்திகள்இந்தியா"பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது!" தங்கத்துடன் ஒப்பிட்டு சர்ச்சை பேச்சு..பரபரப்பை கிளப்பிய கேரள மதகுரு!

“பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது!” தங்கத்துடன் ஒப்பிட்டு சர்ச்சை பேச்சு..பரபரப்பை கிளப்பிய கேரள மதகுரு!

-

- Advertisement -

கேரளாவில் இஸ்லாத்தின் முக்கிய மதகுருவான காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முலியார், “பெண்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்” என்று பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு எதிரான இந்தப் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்."பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது!" தங்கத்துடன் ஒப்பிட்டு சர்ச்சை பேச்சு..பரபரப்பை கிளப்பிய கேரள மதகுரு!

‘தங்க நகையைப் போன்றவர்கள் பெண்கள்’: சர்ச்சைப் பேச்சு
கொச்சியில் நடைபெற்ற ‘ஹப்புல் ரசூல்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முலியார், பெண்களின் பொதுவெளிப் பங்கேற்பு குறித்துக் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். கூட்டத்தில் பேசிய அவர், ”பெண்கள், ஆண்களுக்கு இணையாகப் பொதுவெளிகளுக்கோ அல்லது பொது மேடைகளுக்கோ வரக்கூடாது. அவ்வாறு வருவது பெரும் அழிவை ஏற்படுத்தும்” என்றார்.

we-r-hiring

தொடர்ந்து பெண்களைத் தங்கத்துடன் ஒப்பிட்டு அவர் பேசியதாவது:
”பெண்கள் தங்கத்தைப் போன்றவர்கள், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒரு தங்க நெக்லஸை சாலையோரத்தில் வைத்தால், வழியில் வரும் பலரும் அதைத் தொட்டுவிட்டுச் செல்வார்கள். அதனால் அந்த நெக்லஸின் அழகு கெடுவதோடு, அதற்குப் பாதுகாப்பும் இல்லாமல் போகும். அது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், பெட்டிக்குள் பூட்டி வைக்க வேண்டும். அதைப்போலவே பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” மேலும், பெண்கள் தங்கள் கண்ணியத்தைக் காக்கப் புர்கா அணிந்து முழு உடலையும் மறைக்க வேண்டும் எனத் திருக்குரான் கூறுவதாகவும், இந்தப்பாடு பெண்களைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்லாமல் அவர்களைப் போற்றிப் பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்டது என்றும் அவர் வாதிட்டார்.

சமஸ்தா அமைப்பின் சுற்றறிக்கையும் தொடரும் விவாதங்களும்
முன்னதாக, பிரபல இஸ்லாமிய அமைப்பான ’சமஸ்தா கேரள ஜம்இய்யதுல் உலமா’ சார்பில் மதராஸா மற்றும் மத நிகழ்ச்சிகளில் பெண்கள் பொது மேடைகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்தச் சூழலில், அதன் பொதுச்செயலாளரான மதகுரு அபூபக்கர் முலியாரின் இந்தப் பேச்சு வெளியாகி இஸ்லாமிய வட்டாரத்திலும், பொதுவெளியிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பெண்கள் அமைப்புகள் மற்றும் தலைவர்கள் கண்டனம்
மதகுருவின் இந்தக் கருத்துகளுக்குப் பெண்கள் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மதத்தின் பெயரால் பெண்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் திட்டமிட்டுப் பறிக்கப்படுவதாகவும், இது பிற்போக்குத்தனமான சிந்தனை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நவீன சமூகத்தில் பெண்களின் பொதுவெளிப் பங்களிப்பை முடக்கும் வகையில் அமைந்துள்ள இத்தகைய கருத்துகளுக்கு எதிராகப் பல தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.

2026-ன் உலகின் சிறந்த இரவுக் கலாச்சார நகரங்கள்: டெல்லி, மும்பையை பின்னுக்குத் தள்ளி பெங்களூரு சாதனை!

MUST READ