- Advertisement -
கன்னியாகுமரியில் உள்ள தனியார் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜேசப் விஜயின் முழு உருவ மெழுகு சிலையை, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் சென்று கண்டு ரசித்தார்.
அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி,

முதல்வரின் உருவச் சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளதைப் பாராட்டியதுடன், நகைச்சுவையாக, “கோட் சூட் போட்ட சிலை வச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்” என்றும் குறிப்பிட்டுச் சென்றார்.
இந்த நிகழ்வு அங்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.
