Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருடன் அமைச்சர்கள் புஸ்ஸி...

தவெக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருடன் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சந்திப்பு

-

- Advertisement -

சென்னையில் அடுத்தகட்ட அரசியல் நகர்வு; செப்டம்பர் 9-ல் நடைபெறும் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்கக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குத் தவெக சார்பில் அதிகாரப்பூர்வ அழைப்புதவெக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருடன் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணித் தலைவர்களுக்குத் தவெக நிர்வாகிகளும், அமைச்சர்களுமான புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர்.

we-r-hiring

சத்தியமூர்த்தி பவனில் முக்கியச் சந்திப்பு: இதன் ஒரு பகுதியாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்குத் தவெக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்தனர்.

அங்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரைச் சந்தித்துப் பேசிய அவர்கள், செப்டம்பர் 9-ல் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முறைப்படி அழைப்பிதழ் வழங்கினர்.

அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை:
தவெக அரசு அமைந்த பிறகு நடைபெறும் இரண்டாவது முக்கியக் கூட்டணிக் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில், தவெக அரசின் இதுவரை நாளைய செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள்,கூட்டணிக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது, அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசியல் உத்திகள்,குறித்துப் விரிவாக விவாதிக்கத் தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.

கூட்டணித் தலைவர்களுக்குத் தொடர் அழைப்பு:
காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தது மட்டுமன்றி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் தவெக அமைச்சர்கள் நேரில் சந்தித்துச் செப். 9 கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.

தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம், தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: “இது ரீல்ஸ் அரசின் பூச்சாண்டி நடவடிக்கை” – மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!

MUST READ