ஈரானின் ரகசிய அணுசக்தி மையத்தைக் இலக்கு வைத்து அமெரிக்கா மிக விரைவில் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கை அமெரிக்காவைப் பொறுத்தவரை மிகவும் ஒரு சிறிய விஷயம் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
‘Pickaxe’ அணுசக்தி மையம் மீது குறி
ஈரானில் ரகசியமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் ‘பிக்எக்ஸ்’ (Pickaxe) மலைப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய அணுசக்தி மையத்தைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் மிக விரைவில் தாக்குதலைத் தொடுக்கும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி நடவடிக்கை திட்டமிடப்பட்டு வருகிறது.

“இது போர் அல்ல… எங்களைப் பொறுத்தவரை ‘Small Potatoes'”
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளவுள்ள இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய ட்ரம்ப், “ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கையை ‘போர்’ (War) என்று அழைக்க முடியாது. இது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய விஷயமே அல்ல; மிகவும் ஒரு சாதாரண, சிறிய விஷயம் (Small potatoes) போன்றதுதான்” எனக் மிகச் சாதாரணமாகக் கூறி அதிரடி கிளப்பியுள்ளார்.
பின்னணி மற்றும் சர்வதேசப் பதற்றம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், ஈரானின் ரகசிய அணு உலை மீது நேரடியாகத் தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக்க அதிபரின் இந்த அதிகாரப்பூர்வ எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பின் இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு மிகப்பெரிய போர் மூளுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
