தரமணி சி.எஸ்.ஐ.ஆர் (CSIR) சாலையில் நடைபாதைகள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், சாலையோரங்களில் கண்டபடி வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளால் முடங்கும் நடைபாதைகள்:
சென்னை தகவல் தொழில்நுட்பப் பாதையின் (IT Corridor) முக்கிய இணைப்பாக விளங்கும் தரமணி சி.எஸ்.ஐ.ஆர் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தச் சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகளைச் சிறு கடைகளும், தள்ளுவண்டிகளும் ஆக்கிரமித்துள்ளன.
இதனால் வழிப்போக்கர்கள் நடைபாதையைப் பயன்படுத்த முடியாமல், ஆபத்தான முறையில் பிரதான சாலையிலேயே நடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள்:
நடைபாதை ஆக்கிரமிப்பு ஒருபுறமிருக்க, வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களைச் சாலையின் ஓரத்திலேயே விதிகளை மீறி நிறுத்திச் செல்கின்றனர். இதனால் சாலை குறுகி, காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கை:
“முக்கியமான இந்த வழித்தடத்தில் ஆக்கிரமிப்புகளால் தினமும் மணி கணக்கில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆபத்தான முறையில் சாலையில் நடக்கும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது” என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியும், போக்குவரத்து காவல்துறையும் இணைந்து:
சி.எஸ்.ஐ.ஆர் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விதிகளை மீறிச் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.
எனப் பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டாவது மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
