Homeசெய்திகள்தமிழ்நாடுபழங்குடியினத் தாயும் சேயும் பலி: சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

பழங்குடியினத் தாயும் சேயும் பலி: சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

கொத்தடிமை உழைப்புச் சுரண்டலை முற்றாக ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க விசிக கோரிக்கை.பழங்குடியினத் தாயும் சேயும் பலி: சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தேன்மொழியும், அவரது பச்சிளம் சிசுவும் பிரசவத்தின் போது உயிரிழந்த துயரச் சம்பவத்திற்குக் காரணமான விறகு வியாபாரியைக் கண்டித்தும், இச்சம்பவம் தொடர்பாகச் ‘சிறப்புப் புலனாய்வுக் குழு’ அமைக்கக் கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

சம்பவத்தின் பின்னணி:
காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் மரம் வெட்டும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த ஆனந்தன் – தேன்மொழி தம்பதியினர், விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் ரூ.20,000 முன்பணம் பெற்றிருந்ததால், அவர் அமைத்துத் தந்த தார்ப்பாய்க் கூடாரத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.

கடந்த 08/09/2026 அன்று நிறைமாத கர்ப்பிணியான தேன்மொழிக்குக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டபோது, வாங்கிய முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அல்லது மரங்களை வெட்டி முடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் எனக் கூறி ஆறுமுகம் அவர்களை மருத்துவமனைக்குச் செல்லவிடாமல் தடுத்துள்ளார். போதிய மருத்துவ உதவியின்றி தார்ப்பாய்க் கூடாரத்திலேயே நடைபெற்ற பிரசவத்தில், கடுமையான ரத்தப்போக்கு காரணமாகத் தாயும் சேயும் துடிதுடித்து உயிரிழந்தனர்.

விசிக முற்றுகைப் போராட்டம்:
இக்கொடூரத்தைக் கண்டித்துக் காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பொன்னேரிக்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து முறையிட்ட பிறகே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தொல். திருமாவளவன் கோரிக்கைகள்:
இச்சம்பவம் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பிரதான கோரிக்கைகள்:

சிறப்புப் புலனாய்வுக் குழு: இச்சம்பவத்தின் பின்னணியை முழுமையாக விசாரிக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாகச் ‘சிறப்புப் புலனாய்வுக் குழுவை’ (Special Investigation Team) அமைக்க வேண்டும்.

கடும் தண்டனை: மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டு இரு உயிர்கள் பலியாகக் காரணமான மர வியாபாரி ஆறுமுகத்தை உடனடியாகச் சிறைப்படுத்தி உரிய சட்டப்பூர்வ தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

கொத்தடிமை முறை ஒழிப்பு: பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டு, அவர்கள் கொத்தடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய வேண்டும்.

2030 செயல்திட்டம்: 2030-க்குள் ‘கொத்தடிமை முறை இல்லாத மாநிலம்’ என்ற இலக்கை அடைவதற்குக் கடுமையான நடைமுறைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

கர்ப்பிணிப் பெண், சிசு உயிரிழப்பு: காரணமானவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்! – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தல்

MUST READ