Homeசெய்திகள்மாவட்டம்தாளவாடி காவல் நிலைய சித்ரவதை சம்பவம்: எஸ்.பி. அதிரடி விசாரணை – இரு காவல்துறையினர் மீது...

தாளவாடி காவல் நிலைய சித்ரவதை சம்பவம்: எஸ்.பி. அதிரடி விசாரணை – இரு காவல்துறையினர் மீது நடவடிக்கை!

-

- Advertisement -

தாளவாடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞரைச் சங்கிலியால் கட்டி வைத்துத் தாக்கிய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சார்பு ஆய்வாளர் (SI) மற்றும் தலைமைக் காவலர் ஆகிய இருவரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.தாளவாடி காவல் நிலைய சித்ரவதை சம்பவம்: எஸ்.பி. அதிரடி விசாரணை – இரு காவல்துறையினர் மீது நடவடிக்கை!

அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ பதிவு
ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல் நிலையத்தில், விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர் ஒருவரைப் போலிஸார் சங்கிலியால் பிணைத்து கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகிப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. காவல் நிலையத்திலேயே நடைபெற்ற இந்த மனித உரி மீறல் சம்பவம் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வந்தனர்.

we-r-hiring

“2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது” – காவல்துறை முந்தைய விளக்கம்
வீடியோ வெளியாகிச் சர்ச்சை எழுந்த நிலையில், இது தொடர்பாக ஆரம்பத்தில் ஈரோடு மாவட்டக் காவல்துறை சார்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், இந்தச் சம்பவம் தற்போது நடைபெற்றது அல்ல; கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பழமையான நிகழ்வு. பழைய சம்பவத்தின் வீடியோ தற்போது தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், சம்பவம் எப்போது நடந்திருந்தாலும் காவல் நிலையத்திற்குள் நடந்த சித்ரவதை மற்றும் மனித உரிமை மீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்தது.

எஸ்பி நேரடி விசாரணை: அதிரடி நடவடிக்கை
பொதுமக்களிடையேயும் ஊடகங்களிலும் இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) இச்சம்பவம் குறித்து நேரடியாக விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில், காவல் நிலையத்திற்குள் இளைஞரைச் சங்கிலியால் கட்டிப் போட்டுத் தாக்கியது உறுதி செய்யப்பட்டதையடுத்து சம்பந்தப்பட்ட சார்பு ஆய்வாளர் (SI), உடன் இருந்த தலைமைக் காவலர் (Head Constable) ஆகிய இருவரையும் உடனடியாகப் பணி மாறுதல் செய்து, ஆயுதப் படைக்கு (Armed Reserve) மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

காவல் நிலைய சித்ரவதை சம்பவம் தொடர்பாகக் காலதாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் இந்த நேரடி நடவடிக்கை காவல்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரில் நள்ளிரவு உச்சக்கட்ட பரபரப்பு: விதிகளை மீறிச் செயல்பட்ட கல்குவாரி – திமுக பிரமுகர் கே.சி.ஆர்.குமார் கைது; 150-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முற்றுகை!

MUST READ