Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் குறைக்கடத்தித் துறை அதிரடி வளர்ச்சி: இதுவரை $1.4 பில்லியன் நிதி ஈர்ப்பு – டிராக்ஸன்...

இந்தியாவின் குறைக்கடத்தித் துறை அதிரடி வளர்ச்சி: இதுவரை $1.4 பில்லியன் நிதி ஈர்ப்பு – டிராக்ஸன் அறிக்கையில் தகவல்!

-

- Advertisement -

இந்தியாவின் குறைக்கடத்தித் துறை (Semiconductor Sector) புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இத்துறை இதுவரை மொத்தமாக 1.4 பில்லியன் டாலர் (சுமார் ₹11,600 கோடிக்கு மேல்) ஈக்விட்டி நிதியை ஈர்த்துள்ளதாக முன்னணி சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ‘டிராக்ஸன்’ (Tracxn) வெளியவிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் குறைக்கடத்தித் துறை அதிரடி வளர்ச்சி: இதுவரை $1.4 பில்லியன் நிதி ஈர்ப்பு – டிராக்ஸன் அறிக்கையில் தகவல்!

கடந்த ஆண்டிலேயே 50% நிதி திரட்டல்

டிராக்ஸன் அறிக்கையின்படி, இதுவரை திரட்டப்பட்ட மொத்த நிதியில் பாதிக்கும் மேற்பட்ட தொகையான $701 மில்லியன் (சுமார் ₹5,800 கோடி) நிதி, கடந்த 2025-ஆம் ஆண்டில் இருந்து மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. அதேபோல், நடப்பு 2026-ஆம் ஆண்டில் இதுவரை $228 மில்லியன் நிதி இத்துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைக்கடத்தித் துறையை மேம்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளும் ‘செமிகான் இந்தியா’ (SEMICON India) போன்ற திட்டங்களுமே முதலீடுகள் பெருமளவில் குவியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

we-r-hiring

முன்னணி நிறுவனங்கள் & தலைநகராக பெங்களூரு

  • அதிக நிதி ஈர்த்த நிறுவனங்கள்:

    • டெஸ்சால்வ் செமிகண்டக்டர் (Tessolve Semiconductor) – $213 மில்லியன்

    • இல்ஜின் எலக்ட்ரானிக்ஸ் (ILJIN Electronics) – $198 மில்லியன்

    • விவிடிஎன் (VVDN Technologies) – $129 மில்லியன்

  • முதன்மை மையங்கள் (Hubs): இந்தியாவில் உள்ள 3,500-க்கும் மேற்பட்ட குறைக்கடத்தி நிறுவனங்களில் சுமார் 18% நிறுவனங்கள் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. நாட்டின் மொத்த முதலீட்டில் 40.1% நிதியை பெங்களூரு மட்டுமே ஈர்த்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக நோய்டா (16.4%), குருகிராம் (10.7%), கொச்சி (8.8%) மற்றும் ஹைதராபாத் (6.2%) ஆகிய நகரங்கள் உள்ளன.

தொழில் பிரிவுகள் மற்றும் வளர்ச்சி

குறைக்கடத்தி உற்பத்தியில் மின்னணு உற்பத்தி சேவைகள் (Electronic Manufacturing Services – EMS) பிரிவில் மட்டும் $313 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் வெறும் $49 மில்லியனாக இருந்த இத்துறையின் நிதி திரட்டல், கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 36 சதவீதத்திற்கும் அதிகமான கூட்டு வளர்ச்சியை (CAGR) எட்டி இத்தகைய பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ளது.

2029 லோக்சபா தேர்தலுக்குள் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி அறிவிப்பு!

MUST READ