பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் தவெக ஆட்சிக் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தவெக ஆட்சி மற்றும் முதலமைச்சர் விஜய்க்குப் பதிலடி தமிழக வெற்றிக் கழகம் முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகள் குறித்து டி.டி.வி. தினகரன் பேசிய முக்கியக் கருத்துகள்:
கூரையில் ஏற்றிவிட்ட கூட்டணி: “தமிழக வெற்றிக் கழகம் தானாகக் கூரையில் ஏறவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகள், அமமுக எம்.எல்.ஏ மற்றும் அதிமுகவின் 25 எம்.எல்.ஏக்கள் சேர்ந்துதான் அவர்களைத் தூக்கிக் கூரையில் ஏற்றிவிட்டுள்ளார்கள்.
கோழியைப் பிடிக்கத் தெரியாதவர்கள் வைகுண்டம் போவதைப் பற்றி யோசிக்கக் கூடாது.
தலைகால் புரியாத ஆட்சி: “குருட்டு அதிர்ஷ்டத்தில் ஆட்சிக்கு வந்த தவெகவுக்கு வாக்களித்த மக்கள் கூட ‘ஏன் வாக்களித்தோம்?’ என்று இப்போது சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
தவெக ஆட்சியாளர்கள் தலைகால் புரியாமல் ஆடுவதை நிறுத்திவிட்டு, இருக்கும் வரை சரியாகப் பணியாற்ற வேண்டும்; இல்லையெனில் மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.
சினிமா பாணி அரசியல்: சினிமாவில் ஒரு கதை உருவாக்குவது போலத்தான் தவெகவினர் பெரியார், அண்ணாவைத் தங்கள் கொள்கைத் தலைவர்களாகச் சொல்கிறார்கள்.
ஆனால் அவர்களைப் பற்றி இவர்களுக்கு உண்மையிலேயே தெரியுமா எனத் தெரியவில்லை.
முதலமைச்சரின் நடிப்பு: கொள்கைத் தலைவரான அண்ணாவின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தாமல் முதலமைச்சர் வெளிநாட்டில் உள்ளார்.
தவெகவினர் போலியானவர்கள் என்பதால் அவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
சினிமாவில் நடித்தவர் இப்போது மக்களிடமும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்பதை அவரது உடல் மொழியே காட்டுகிறது. இதையே திருமாவளவனும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து… முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாகச் சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் பல தகவல்கள் வருகின்றன.
அவர் என்ன தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார் என்பது தெரிந்த பிறகே அதுகுறித்துத் கருத்துச் சொல்வது சரியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம்:
கடும் எதிர்ப்புபட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை முற்றிலுமாக எதிர்த்த தினகரன், “அங்கு இடவசதி இல்லை.
கடற்கரை ஓரமாக இருப்பதால் மத்திய அரசின் அனுமதியும் கிடைக்காது. மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எடுக்கும் எந்த முயற்சியும் தொடக்கத்திலேயே கிள்ளி எறியப்படும்” எனக் கூறினார்.
இடைத்தேர்தல் கூட்டணி நிலைப்பாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அமமுக அங்கம் வகிப்பதாகக் குறிப்பிட்ட தினகரன், வரவிருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
