தமிழக முதலமைச்சர் விஜய் மேற்கொண்டுள்ள லண்டன் பயணம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் அல்ல; அதுவொரு வெற்றுச் சுற்றுப்பயணம் மட்டுமே என்றும், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களின் கணக்கைக் காட்டிப் பொய் உரைப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையின் விவரம்:
முதலீடுகள் என்ற பெயரில் ஏமாற்று வேலை!
முதலமைச்சர் எதற்காக லண்டன் சென்றுள்ளார் என்பதற்கான முறையான விளக்கத்தை அரசு தரப்பு இதுவரை அளிக்கவில்லை.
வெளிநாடுகளிலிருந்து தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவதாகத் தம்பட்டம் அடிக்கும் அரசு, உண்மையில் ஏற்கனவே தமிழகத்தில் இயங்கி வரும் நிறுவனங்களையே புதிய தொழில் முதலீடுகளாகத் திணித்து மக்களை ஏமாற்றி வருகிறது.
முதலமைச்சரின் இந்த லண்டன் பயணம் என்பது முழுக்க முழுக்கத் தனிப்பட்ட சுற்றுப்பயணமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்றும், அவர் தமிழகத்திற்கு எந்தவொரு புதிய முதலீட்டையும் கொண்டுவரவில்லை என்பது முற்றிலும் வெளிப்படையான உண்மை என்றும் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
மீனவர்களின் வயிற்றில்டிக்கும் பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டம்!
புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது குறித்த அரசின் அறிவிப்புகளில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் தொலைநோக்குப் பார்வையும் இல்லை என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்:
* திட்டமிடாத கொள்ளைக்கூட்டம்: தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டும் என்று அறிவிப்பதற்கு முன்பாக, அதற்கான முறையான இடமோ அல்லது சாத்தியக்கூறு திட்டமோ எதும் தயாரிக்கப்படவில்லை.
ஆரம்பத்தில் 1,200 கோடி ரூபாய் எனக்கூறிவிட்டு, தற்போது அதனை 2,000 கோடி ரூபாயாக உயர்த்தியிருப்பது மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் செயலாகும்.
* நடிகராக ஒரு வேடம், முதலமைச்சராகத் துரோகம்: “திரைப்படங்களில் மீனவர்களின் நண்பனாக நடித்துக் கைதட்டல் வாங்கிய விஜய், இன்று முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தைக் கொண்டுவர வெட்கமின்றி முயல்கிறார்” என்று நயினார் நாகேந்திரன் ஆவேசமாக் குற்றம் சாட்டியுள்ளார்.
மீனவ சமுதாயத்திற்கு எதிராகவும், திட்டமிடல் இல்லாத அறிவிப்புகளையும் வெளியிட்டுவரும் தமிழக அரசுக்கு பாஜக தொடர்ந்து கடும் கண்டனத்தைத் தெரிவிக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!
