Homeசெய்திகள்தமிழ்நாடுஅன்பில் மகேஸ் வீட்டில் அதிரடி ரெய்டு... 6 இடங்களில் விடிய விடிய சோதனை: கொதித்தெழுந்த ஸ்டாலின்!

அன்பில் மகேஸ் வீட்டில் அதிரடி ரெய்டு… 6 இடங்களில் விடிய விடிய சோதனை: கொதித்தெழுந்த ஸ்டாலின்!

-

- Advertisement -

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குச் சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்சப் புகாரின் பேரில் நடந்து வரும் இந்த சோதனைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அன்பில் மகேஸ் வீட்டில் அதிரடி ரெய்டு... 6 இடங்களில் விடிய விடிய சோதனை: கொதித்தெழுந்த ஸ்டாலின்!

சோதனைக்கான பின்னணி
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும் மற்றும் தடையில்லா சான்றிதழ் பெறவும் லஞ்சம் பெறப்பட்டதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் பகிரங்கக் குற்றம் சாட்டியிருந்தது. இந்த லஞ்சப் புகாரில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பெயரும் அடிபட்டது.

we-r-hiring

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பி.டி. அரசகுமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத்தில் இன்று காலை 7 மணி முதல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையைத் தொடங்கியுள்ளனர். சென்னையில் இருந்து இரண்டு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அன்பில் மகேஸின் வீடு உட்பட அவருக்குச் சொந்தமான 6 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
முன்னாள் அமைச்சர் வீட்டில் நடக்கும் இந்த சோதனைக்கு தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது நடத்தப்படும் இந்த சோதனை, மற்றுமொரு திசைதிருப்பும் மற்றும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம், நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தலைமைச் செயலகம் முன் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு, இராமநாதபுரம் இரட்டைக் கொலை, சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், அயனாவரத்தில் பெண் காவலரிடம் சீண்டல் போன்ற மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் வெளிநாட்டில் பிஸியாக உள்ளார்.

இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது இந்த அரசு. இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சிகள் மீது ரெய்டு நடத்துவதால் மக்களின் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை அரசு விரைவில் உணரும்.”

பரபரப்பான சூழல்
முன்னாள் அமைச்சர் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்திவரும் சம்பவமும், அதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு தி.மு.க. தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெண் யூடியுபருக்கு எயிட்ஸ் இருப்பதாக அவதூறு பரப்பிய நக்கீரன் பிரகாஷ் கைது: சென்னை ஆதம்பாக்கம் போலீசார் நடவடிக்கை

MUST READ