
பசியைத் தீர்ப்பதற்கான சமையல், ருசிப் பார்ப்பதற்காக சமையல் என்பது இயல்பானதே. ஆனால், பசிக்கும், ருசிக்கும் அல்ல; சாதனைப் பிடிப்பதற்கும் சமையல் கலை பயன்பட்டுள்ளது.
நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் ஆகும் விஷ்ணு விஷாலின் புதிய படம்!?
நைஜீரியா நாட்டின் இளம்பெண் ஒருவர் தொடர்ந்து 100 மணி நேரம் சமைத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
நைஜீரியா நாட்டின் தலைநகர் லாகோஸில் (Lagos) கடந்த மே 11- ஆம் தேதி அன்று சமைக்கத் தொடங்கிய 27 வயது இளம்பெண் ஹில்டா பேசி (Hilda Baci) என்ற சமையல் கலைஞர், தொடர்ந்து இடைவிடாது சமைத்து மே 15- ஆம் தேதி அன்று இரவு 07.45 தனது சமையலை நிறைவு செய்தார்.
சுமார் 100 மணி நேரம் இடைவெளியின்றி 110 வகையான உணவுகளை சமைத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் தொடர்ந்து அதிக நேரம் சமைத்த தனிநபர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். குறிப்பாக, 87 மணி நேரம் சமைத்த இந்திய பெண்ணின் சாதனையை முறியடித்தார். அந்த சாதனை பெண்ணுக்கு அந்நாட்டு அதிபர் முகமது புஹாரி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தனது காதலனை மறைமுகமாக வெளியிட்டாரா?
சூப், மேற்கு ஆப்பிரிக்க உணவுகள் உள்ளிட்டவைகளை சமைத்த அந்த இளம்பெண், பின்னர் அந்த உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.