spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது

-

- Advertisement -

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது

செல்வா, நிசாந்த், அருண் போன்ற மூன்று  நபரை கோயம்பேடு போலீசார் கைது செய்தார்கள். செல்போனை பறித்து தப்பிய குரோம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த மூன்று பேர் கைது
மூன்று பேர் கைது

கோயம்பேடு, வடவேலியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யோகம்மாள் (வயது 75). இவர் நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினார். இதை பார்வையிட்ட மர்ம கும்பல் வீடு புகுந்து யோகம்மாள் அணிந்திருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.இரண்டாயிரம் பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டப் பொருட்களை  மர்ம கும்பல் திருடி சென்று விட்டனர்.

we-r-hiring

இதுதொடர்பாக அதேப் பகுதியைச் சேர்ந்த செல்வா, நிசாந்த், அருண் ஆகிய மூன்று பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்துள்ளனர். கே.கே.நகர், அண்ணா மெயின் ரோட்டில் உள்ள அரசு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஊழியர் ஒருவரிடம் செல்போனை பறித்து தப்பிய குரோம்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 35) என்பவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

MUST READ