முதியவரின் அறியாமையால் ஏற்பட்ட தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் கோபால். இவருக்கு (வயது 66). இவரது மனைவி இறந்து போனதையடுத்து கோபால் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு நீண்ட நேரமாக கேஸ் கசிவு ஏற்பட்டு இருந்துள்ளது. இது தெரியாமல் கேஸ் அடுப்பை பற்ற வைக்க கோபால் முயற்சித்த போது வீடு முழுவதும் பரவி பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கோபால் உடலின் கை, கால், தலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது.


மேலும் இந்த தீ விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாசமானது. மேலும் கதவு உள்ளிட்ட பொருட்களும் சுக்குத்தூளாகியது, வீட்டிலிருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துள்ளது. வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது.

இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கோபாலை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீ விபத்து குறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். முதியவரின் அறியாமையால் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


