Homeசெய்திகள்உலகம்10 மாச காத்திருப்பு.. 2.5 மணி நேர வேலை! "உடம்பு சரியில்ல"ன்னு சொல்லி கறுப்பின இளைஞரைத்...

10 மாச காத்திருப்பு.. 2.5 மணி நேர வேலை! “உடம்பு சரியில்ல”ன்னு சொல்லி கறுப்பின இளைஞரைத் தூக்கிய அமெரிக்க நிறுவனம்!

-

- Advertisement -

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தேடிச் சென்ற இளைஞர் ஒருவர், தான் வேலைக்குச் சேர்ந்து வெறும் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாகவே, “உடலில் சுத்தமில்லை” என்ற காரணம் கூறி அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பத்த மாதங்களாக வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுவந்த தனக்கு, இனவெறி காரணமாகவே இந்த அவமானம் நேர்ந்திருக்கலாம் என அந்த இளைஞர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.10 மாச காத்திருப்பு.. 2.5 மணி நேர வேலை! "உடம்பு சரியில்ல"ன்னு சொல்லி கறுப்பின இளைஞரைத் தூக்கிய அமெரிக்க நிறுவனம்!

வேலைக்குச் சேர்ந்து 2.5 மணி நேரத்தில் வெளியேற்றம்

அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர், கடந்த 10 மாதங்களாக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒரு நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைத்த சந்தோஷத்துடன் பணிக்குச் சென்றுள்ளார். “வாழணும்ன்னு ஆசையோட வந்தவனை வாசல்லயே திருப்பி அனுப்பிட்டாங்க” என்ற கதையாக, அவர் பணிக்குச் சேர்ந்து இரண்டரை மணி நேரம்கூட ஆகியிருக்காது; அதற்குள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அவரை அழைத்து, உடல் சுத்தமாக இல்லை எனக் கூறி உடனடியாகப் பணிநீக்கம் செய்துள்ளனர்.

we-r-hiring

“நான் கருப்பினத்தைச் சேர்ந்தவன் என்பதாலா?” – இளைஞரின் மனவேதனை

இந்த திடீர் பணிநீக்கம் குறித்து அந்த இளைஞர் மிகுந்த மன உளைச்சலுடனும் கண்ணீருடனும் தனது சோகத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “நான் வேலைக்குச் செல்வதற்காக அன்றுதான் புதிதாகச் சட்டை அணிந்து சென்றிருந்தேன். என் உடலில் எந்தவித வியர்வை நாற்றமும் இல்லை. அப்படியிருந்தும் என்னை வேண்டுமென்றே குறிவைத்துத் தூக்கி எறிந்துள்ளனர். நான் ஒரு கருப்பினத்தைச் சேர்ந்தவன் (Black man) என்பதால்தான் என்னை இவ்வாறு அவமதித்து வேலையை விட்டு நீக்கியிருக்கிறார்கள்” என்று இனவெறித் தாக்குதல் குறித்துக் குற்றம்சாட்டியுள்ளார்.

மாதக்கணக்கில் வேலை இல்லாமல் தவித்து, எப்படியோ கிடைத்த வேலையிலும் நிறவெறி காரணமாக சம்பந்தமே இல்லாமல் நிராகரிக்கப்பட்ட இச்சம்பவம் அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தோர் மற்றும் சிறுபான்மையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் மசூதி அருகே பயங்கர குண்டுவெடிப்பு! வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் – 21 பேர் பலி

MUST READ