Homeசெய்திகள்உலகம்அமெரிக்க கப்பல்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்! சவுதிக்கு மட்டும் தாக்குதல் தொடரும் – ஹவுதிகள்

அமெரிக்க கப்பல்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம்! சவுதிக்கு மட்டும் தாக்குதல் தொடரும் – ஹவுதிகள்

-

- Advertisement -

செங்கடல் வழியாக செல்லும் அமெரிக்க வர்த்தக கப்பல்களை தாக்கப்போவதில்லை என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஏமனில் தீவிரமடைந்து வரும் மோதலில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக வேறு எந்த நாடும் தலையிட வேண்டாம் என்றும் ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

we-r-hiring

அமெரிக்க கப்பல்களுக்கு தாக்குதல் இல்லை

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையான பாப்-அல்-மண்டேப் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கப்பல்களை குறிவைக்கப் போவதில்லை என ஹவுதி குழுவின் மூத்த உறுப்பினர் முகமது அல்-புகைதி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவை தவிர வேறு எந்த நாட்டையும் குறிவைக்கவில்லை என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் பாப்-அல்-மண்டேப் ஜலசந்தி வழியாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமனில் அமெரிக்கா – ஹவுதி பேச்சுவார்த்தை

ஹவுதிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் ஹவுதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தெரிவித்திருந்தார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில், அமெரிக்க கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களை தவிர்ப்பது தொடர்பாக ஹவுதிகள் உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Reuters-ன் தகவலின்படி, ஓமனில் நடைபெற்ற சந்திப்பில் ஹவுதி பிரதிநிதிகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கப்பல்களை குறிவைக்க மாட்டோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பாப்-அல்-மண்டேப் ஜலசந்தி குறித்து ஹவுதிகள் விளக்கம்

பாப்-அல்-மண்டேப் ஜலசந்தியை முழுமையாக மூடுவதற்கு தாங்கள் முயற்சிக்கவில்லை என அல்-புகைதி கூறியுள்ளார். அனைவருக்கும் இந்த கடல்வழிப் பாதை வழியாக தடையற்ற போக்குவரத்து கிடைக்க வேண்டும் என்பதே தங்களது ராணுவ நடவடிக்கையின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சவுதி மீது தாக்குதல் தொடரும் என எச்சரிக்கை

இதற்கிடையே, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீதான நீண்டகால முற்றுகையை சவுதி அரேபியா நீக்கி, ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள செங்கடல் துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்ல அனுமதிக்கும் வரை சவுதி மீதான தாக்குதல் தொடரும் என ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் சவுதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஹவுதிகள் கூறியுள்ளனர்.

இத்தாலி பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிய தடை? பிரதமர் மெலோனி அதிரடி அறிவிப்பு – புதிய சட்டம் என்ன சொல்கிறது?

MUST READ