Homeசெய்திகள்உலகம்ஐநா பொதுப்பேரவையில் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய துருக்கி அதிபர் எர்தொகன்: சர்வதேச அரங்கில் சலசலப்பு!

ஐநா பொதுப்பேரவையில் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய துருக்கி அதிபர் எர்தொகன்: சர்வதேச அரங்கில் சலசலப்பு!

-

- Advertisement -

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப்பேரவைக் கூட்டத்தில் பேசிய துருக்கி அதிபர் ரெசெப் தையப் எர்தொகன் (Recep Tayyip Erdogan), காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் சர்வதேச அரங்கில் எழுப்பியுள்ளது ராஜதந்திர வட்டாரங்களில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற பொதுப்பேரவைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அருகில் இருக்க, உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய எர்தொகன், தெற்காசியாவில் நிலையான அமைதி நிலவ வேண்டுமானால் காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்

மாநாட்டில் உரையாற்றிய எர்தொகன் குறிப்பிடுகையில்,

> “தெற்காசியாவில் காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் அதன் தொடர்பான தீர்மானங்களின் அடிப்படையில், பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது”

எனத் தெரிவித்தார். துருக்கியும் பாகிஸ்தானும் அண்மையில் பாதுகாப்புத் துறையில் புதிய கூட்டு ஒப்பந்தங்களை எட்டியுள்ள சூழலில், எர்தொகனின் இந்த கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு

இந்தியாவின் உள்விவகாரமான காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி அதிபர் தொடர்ந்து இதுபோன்று கருத்து தெரிவிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் பலமுறை ஐநா மேடைகளிலும் எர்தொகன் இதே போன்ற கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இருப்பினும், காஷ்மீர் விவகாரம் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகள் யாவும் இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு விவகாரமே தவிர, இதில் எந்தவொரு மூன்றாவது நாட்டின் மத்தியஸ்தமோ அல்லது வெளிநாட்டுத் தலையீடோ தேவையற்றது என்றும் இந்தியா ஏற்கனவே பலமுறை தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரங்கில் துருக்கி தலைவர் காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் கிளறி இருப்பது ராஜதந்திர வட்டாரத்தில் மேலும் என்ன வகையான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை

MUST READ