Homeசெய்திகள்சினிமாஅமரன் படத்திற்காக 3-வது தேசிய விருது: சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உற்சாக...

அமரன் படத்திற்காக 3-வது தேசிய விருது: சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உற்சாக வரவேற்பு!

-

- Advertisement -

‘அமரன்’ திரைப்படத்தின் இசைக்காக 72-வது தேசிய விருதை வென்றுள்ள பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், குஜராத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டுவிட்டுச் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அமரன் படத்திற்காக 3-வது தேசிய விருது: சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உற்சாக வரவேற்பு!

தேசிய விருது குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் பேட்டி
குஜராத்தில் உள்ள அகமதாபாத் வழியாகச் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

we-r-hiring

3-வது தேசிய விருது: “72-வது தேசிய விருது வழங்கும் விழாவில் ‘அமரன்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றது மிகுந்த பெருமையளிக்கிறது. என் சினிமா வாழ்க்கையில் நான் மூன்றாவது முறையாகத் தேசிய விருது பெறுவது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது” எனத் தெரிவித்தார்.

ரசிகர்களுடன் மகிழ்ச்சி: விமான நிலையத்தில் தன்னை வரவேற்கக் கூடியிருந்த ரசிகர்களுடன் உற்சாகமாகச் செல்ஃபி எடுத்துக் கொண்ட அவர், அனைவரின் அன்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.

‘அமரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ள ஜி.வி.பிரகாஷ் குமாருக்குத் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அமரன்’ படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெற்றார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்!

MUST READ