Homeசெய்திகள்சினிமாகொரோனா தடுப்பூசி சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்கு ரத்து!

கொரோனா தடுப்பூசி சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்கு ரத்து!

-

- Advertisement -

கொரோனா தடுப்பூசி குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கைக் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்கு ரத்து!

வழக்கின் பின்னணி கடந்த கொரோனா காலத்தில் நடிகர் விவேக் மறைவுக்குப் பிறகு, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்தும், அரசு மேற்கொண்ட தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்ட எழுந்தது.

we-r-hiring

இதன் பேரில் சென்னை வடபழனி காவல்துறையினர், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துதல், தொற்றுநோய்ப் பரவல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட இந்தக் குற்றச்சாட்டையும் வழக்கையும் முழுமையாக ரத்து செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், மன்சூர் அலிகானின் விளக்கத்தையும் மனுவில் உள்ள விவரங்களையும் ஏற்றுக்கொண்டு, அவர் மீது காவல் துறையினரால் தொடரப்பட்ட வழக்கினை முழுமையாக ரத்து செய்து உத்தர பிறப்பித்துள்ளது.

நடிகர் சிம்புவுடன் கைகோர்க்கும் ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன்: நவம்பரில் தொடங்குகிறது புதிய படத்தின் படப்பிடிப்பு!

 

MUST READ