எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவான SpaceXAI-யின் பெயர் விரைவில் SpaceXSI என மாற்றப்பட உள்ளது. இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.


‘AI’க்கு பதிலாக ‘SI’
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவை குறிக்கும் ‘Artificial Intelligence’ அல்லது ‘AI’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘Super Intelligence’ அல்லது ‘SI’ என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, SpaceXAI நிறுவனத்தின் பெயரை SpaceXSI என மாற்ற முடியுமா என்று எலான் மஸ்க்கிடம் எக்ஸ் தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு மஸ்க், பெயர் மாற்றம் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.
‘No more AI’ என மஸ்க் கருத்து
இதற்கு முன்னதாக எலான் மஸ்க், “AI வேண்டாம்; SI சிறந்தது” என்ற கருத்தை தனது பதிவில் தெரிவித்திருந்தார். மேலும் SpaceX ஒரு ‘Super Intelligence’ நிறுவனமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் பெயர் மாற்றம்
SpaceXAI என்ற பெயர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் SpaceX, எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தை கையகப்படுத்திய பின்னர், அதன் AI பிரிவு SpaceX உடன் இணைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பிரிவுக்கு SpaceXAI என்ற பெயர் சூட்டப்பட்டது. தற்போது மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
எனினும், பெயர் மாற்றம் எப்போது அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எலான் மஸ்க் இதுவரை குறிப்பிட்ட காலக்கெடுவை வெளியிடவில்லை. SpaceXAI-யின் எக்ஸ் கணக்கும் தகவல் வெளியாகிய நேரத்தில் பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.
இந்த பெயர் மாற்றம் தொழில்நுட்ப உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் ‘AI’ என்பதற்கு பதிலாக ‘Super Intelligence’ என்ற வார்த்தையை முன்னிறுத்தும் புதிய போக்குடன் மஸ்க்கின் நடவடிக்கை இணைந்துள்ளது.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 5.9 ஆக பதிவு!
