Homeசெய்திகள்உலகம்ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது நிலைதடுமாறிய அமெரிக்க துணை ஜனாதிபதியின் மனைவி உஷா - வைரல் வீடியோ

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது நிலைதடுமாறிய அமெரிக்க துணை ஜனாதிபதியின் மனைவி உஷா – வைரல் வீடியோ

-

- Advertisement -

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ், கைக்குழந்தையுடன் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது நிலைதடுமாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உஷா வான்ஸ் தனது 9 வார கைக்குழந்தையான அலெக் நீல் வான்ஸை பேபி கேரியரில் சுமந்தபடி ஹெலிகாப்டரின் படிக்கட்டுகளில் இறங்கினார்.

அப்போது படிக்கட்டின் கீழ்ப்பகுதியில் ஒரு படியை தவறவிட்டதால் உஷா திடீரென நிலைதடுமாறினார். உடனடியாக அருகில் இருந்த கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு தனது சமநிலையை மீட்ட அவர், குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உஷா குழந்தையுடன் தடுமாறியபோதும் அருகில் நின்றிருந்த பாதுகாப்புப் படையினர் யாரும் உடனடியாக உதவ முன்வராதது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும், அந்த நேரத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக அவர்கள் அசையாமல் இருந்தார்களா என்பது வீடியோ மூலம் உறுதியாக தெரியவில்லை. உஷா தானாகவே கைப்பிடியைப் பிடித்து நிலைநிறுத்திக்கொண்ட பின்னர், குழந்தையைத் தேற்றியபடி அங்கிருந்து சென்றார்.

இதற்கிடையில், ஜே.டி. வான்ஸ் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது அவர்களின் 4 வயது மகள் மிரபெல்லை தூக்கிக்கொண்டு வந்தார். பின்னர் குடும்பத்தினர் அலாஸ்கா செல்லும் விமானத்தை நோக்கி சென்றனர்.

ஜே.டி. வான்ஸ் அலாஸ்காவில் நடைபெறும் குடியரசுக் கட்சி பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தார். இந்த பயணம் உஷா வான்ஸ் 50-வது அமெரிக்க மாகாணத்துக்கு சென்ற பயணமாகவும் அமைந்துள்ளது.

சில நொடிகள் மட்டுமே நீடித்த இந்த சம்பவம், கைக்குழந்தையுடன் பயணம் செய்த உஷா வான்ஸின் பாதுகாப்பு மற்றும் அருகில் இருந்தவர்களின் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏஐயால் சில மோசமான விளைவுகள் ஏற்படலாம்: ஓபன் ஏஐ நிறுவனர் சாம் அல்ட்மன் எச்சரிக்கை!

MUST READ