Homeசெய்திகள்உலகம்பெரும்பான்மை இல்லாததால் ஸ்பெயினில் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு – நவம்பர் 29-ல் பொதுத்தேர்தல்!

பெரும்பான்மை இல்லாததால் ஸ்பெயினில் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு – நவம்பர் 29-ல் பொதுத்தேர்தல்!

-

- Advertisement -

ஸ்பெயினில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான சிறுபான்மை அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் நவம்பர் 29-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

we-r-hiring

ஸ்பெயின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையான காங்கிரஸ் ஆஃப் டெபுடீஸில் மொத்தம் 350 இடங்கள் உள்ளன. பிரதமர் சான்செஸ் தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி 121 இடங்களையும், அதன் இடதுசாரி கூட்டணி பங்காளிகள் 26 இடங்களையும் வைத்துள்ளனர். பெரும்பான்மைக்கு 176 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆளும் கூட்டணிக்கு 147 இடங்கள் மட்டுமே உள்ளன.

இதனால் சட்டங்களை நிறைவேற்ற பிராந்திய மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவை சான்செஸ் அரசு தொடர்ந்து சார்ந்திருந்தது. சமீபத்தில் நாட்டின் வீட்டு வசதி மற்றும் வாடகை நெருக்கடி தொடர்பாக அரசு கொண்டுவந்த இரண்டு அவசர நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதுவே அரசியல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயினில் வீட்டு வாடகை மற்றும் வீட்டு வசதி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக சமீபகாலமாக மக்கள் போராட்டங்களும் நடைபெற்றன. குறிப்பாக மாட்ரிட்டில் 87 வயது பெண் ஒருவர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து வீட்டு வசதி தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு அழுத்தம் அதிகரித்தது.

நவம்பர் 29-ல் பொதுத்தேர்தல்

ஸ்பெயின் மன்னர் பிலிப் 6-ம் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, 2023-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆஃப் டெபுடீஸ் மற்றும் செனட் ஆகிய இரு அவைகளும் கலைக்கப்பட்டுள்ளன. இரு அவைகளுக்குமான தேர்தல் 2026 நவம்பர் 29-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் நவம்பர் 13-ம் தேதி தொடங்கி நவம்பர் 27-ம் தேதி நிறைவடையும். தேர்தலுக்குப் பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் டிசம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற கலைப்பைத் தொடர்ந்து புதிய தேர்தல் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்று நாடாளுமன்றத்தில் தேவையான ஆதரவை உருவாக்க சான்செஸ் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் ஸ்பெயினின் அடுத்த அரசை அமைப்பது தொடர்பான அரசியல் நகர்வுகள் அடுத்த சில வாரங்களில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும்போது நிலைதடுமாறிய அமெரிக்க துணை ஜனாதிபதியின் மனைவி உஷா – வைரல் வீடியோ

MUST READ