கடந்த 2001 ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தின் முதல்வராக பிரதமர் மோடி முதல் முறை பதவியேற்ற நாள் அக்டோபர் 7 இன்று. பிரதமர் மோடியின் முதல்வர், பிரதமர் என 25 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை கொண்டாடும் விதமாக தமிழக பாஜக சார்பில் சேவா ஜோதி யாத்திரை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது.


சென்னை கமலாலயம் முதல் தி நகர் பாண்டிபாஜர் சிக்னல் வரை நடைபெறும் சேவா ஜோதி பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் தீபச்சுடர் ஏந்தி பேரணி செல்ல உள்ளனர்.
முன்பாக கமலாலயத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் காணொளி மூலமாக பாஜக நிர்வாகிகளுடன் உரையாற்ற உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, இந்த அக்டோபருடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் “சேவை தினமாக” நாங்கள் கொண்டாடி வருகிறோம்.
பொதுவாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது பிறந்தநாளைத்தான் கொண்டாடுவார்கள். ஆனால், பிரதமர் மோடி தமது பதவியேற்பு நாளை நாட்டுக்கான சேவை நாளாகக் கருதி கொண்டாடுவதோடு, தொடர்ந்து உறுதியாக இருந்து, எதிர்கால இந்தியாவை ஒரு பலமான அகண்ட பாரதமாக உருவாக்குவோம்.
இது நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உண்மையில் இது போன்ற ஒரு பிரதமர் இனிமேல் நாட்டில் வர முடியுமா என்பது சந்தேகமே; அவர் ஒருவர்தான் எல்லாமே என்ற அளவில் நாடு உள்ளது. 2047-க்குள் இந்தியாவை வலிமைமிக்க, வளர்ச்சி அடைந்த வல்லரசு நாளாக மாற்றுவதற்கு நாங்கள் அனைவரும் இன்று உறுதியேற்கிறோம்.
டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் எஸ்.ஐ.ஆர் (SIR) விவகாரத்துக்காகப் போராடுவதும், தமிழ்நாட்டிலும் எஸ்.ஐ.ஆர்-இல் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறுவதும் வேடிக்கையாகவும் ஒரு காமெடி போலவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் முறைகேடு நடந்திருந்தால் பாஜக அல்லவா வெற்றி பெற்று ஆட்சிக்கே வந்திருக்க வேண்டும்? காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் கட்சியினர்தானே இந்த ஈ.வி.எம் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு வந்தார்கள்? அதற்குப் பிறகு அவர்களும் எத்தனை முறை ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.
தற்போது கேரளாவில் காங்கிரஸ் கட்சிதானே ஆட்சியில் இருக்கிறது. கர்நாடகாவில் டி.கே. சிவகுமார் காங்கிரஸ் கட்சியினர்தானே ஆட்சியில் இருக்கிறார்கள். அங்கு பாஜக தோற்றுத்தானே இருக்கிறது? Evm முறைகேடு நடந்திருந்தால் அங்கெல்லாம் குளறுபடி செய்து ஆட்சியைப் பிடித்திருக்கலாமே? தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை யாரும் எதுவும் சொல்லாமல் திடீரென்று இப்போது sir பற்றி பேசுவது வெறும் போலிப் பிரச்சாரமும், வெற்று விளம்பரமுமே ஆகும்.
திருமாவளவன் கடந்த ஐந்து ஆண்டுகளாக யாருடன் கூட்டணியில் இருந்தார், என்னவெல்லாம் பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் எதற்காக திடீரென்று நிலைப்பாட்டை மாற்றிப் பேசுகிறார் என்பதும் புரியவில்லை. அவர் கூட்டணிக்கு வந்த உடனே ஏன் எஸ்.ஐ.ஆர் முறைகேடு பற்றிப் பேசவில்லை? திருமாவளவன் பேசுவதை எல்லாம் ஒரு காமெடியாகவும் தேவையில்லாத பிரச்சனையாகவுமே பார்க்க வேண்டியுள்ளது.
நடிகர் பிரகாஷ் ராஜ் சினிமாவில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தாரோ, அதே போன்ற கேரக்டரில்தான் நிஜ வாழ்விலும் நடந்துகொள்கிறார் என பிரதர் மோடி குறித்த நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனத்திற்கு பதில் அளித்தார்.
பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய்: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்
