Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவொற்றியூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் –...

திருவொற்றியூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – அன்புமணி

-

- Advertisement -

சென்னை திருவொற்றியூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.திருவொற்றியூரில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – அன்புமணி

சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் பிடிபட்டுள்ள நிலையில் மற்றொருவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

we-r-hiring

பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் கொடூரம்
திருவொற்றியூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியின் பெற்றோர் மாலை நேரத்தில் பானி பூரி விற்பனைக்காக வெளியே சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், அதே வீட்டின் மேல்தளத்தில் வசித்து வந்ததாகக் கூறப்படும் மூன்று இளைஞர்கள் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி

சிறுமிக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருவர் பிடிபட்டனர்; ஒருவரை தேடும் பணி

சம்பவம் தொடர்பாக ராகுல், சித்தரஞ்சன், மனோஜ் ஆகிய மூன்று இளைஞர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் இருவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும், மற்றொருவர் தப்பியோடிய நிலையில் அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சிறுமிக்கு எதிராக குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்களை காவல்துறையினர் தப்பவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தப்பியோடியதாக கூறப்படும் நபரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, அதிகபட்ச தண்டனை கிடைக்க தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கவலைப்படாதீங்க… முதலமைச்சர் விஜய் இருக்காரு – பெற்றோரை இழந்த சிறுவன் மோகன்ராஜுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆறுதல்

MUST READ