Homeசெய்திகள்தமிழ்நாடுஆந்திரா செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய்? சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கத் திட்டம்!

ஆந்திரா செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய்? சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கத் திட்டம்!

-

- Advertisement -

தமிழக முதலமைச்சர் விஜய், ஆந்திரப் பிரதேசத்துக்குச் சென்று அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

அதன்படி, வரும் அக்டோபர் 13-ம் தேதி விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை விஜய் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின்போது இரு மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வளப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து ஆலோசனை

கோதாவரி – கிருஷ்ணா – காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் தொடர்பாக இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்துக்கும் ஆந்திரப் பிரதேசத்துக்கும் இடையிலான நீர்ப் பகிர்வு விவகாரம் நீண்டகாலமாக முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், இரு மாநில முதலமைச்சர்களின் சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.

டெல்லியில் கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்தையே சிதைக்கும் செயல்கள் – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 

MUST READ